
லத்திகா
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா 1 – 0* என்ற கணத்தில் வெற்றி பெற்றது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து அந்த வெற்றியால் இந்தியா மீண்டு எழுந்தது.
முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்த தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலிய தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங், பட் கமின்ஸ் போன்ற முன்னாள் இந்நாள் வீரர்கள் தெரிவித்தார்கள். அதே போல ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகங்களும் இந்திய அணி தோற்பது உறுதி என்று வசை பாடின.
ஆனால் அவர்களுக்கு முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியர்களுக்கு முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தம்முடைய பங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி மிட்டே பத்திரிகையில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.
“வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் பின் ஆஸ்திரேலியா 10 – 15 வருடங்கள் உலக கிரிக்கெட்டில் டாமினேட் செய்தது. அதனாலேயே அவர்கள் இது போன்ற பெரிய தோல்வியை சந்திக்கவில்லை. தற்போது கடந்த 15 வருடங்களில் இந்திய அணி டாமினேட் செய்கிறது. 2007 – 2008 தொடரில் பெர்த் நகரில் ஹர்பஜன் சிங் – சைமண்ட்ஸ் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலுக்கு பின் ஆஸ்திரேலிய ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன”
“பெர்த் நகரில் அப்போது பெற்ற வெற்றியும் இப்போது பெற்ற வெற்றியும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிராக இருப்பதை காட்டுகின்றன. 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சை பற்றி நினைத்துப் பாருங்கள். அந்த கேட்சின் உண்மைத்தன்மை பற்றி ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஏராளமான கேள்விகளும் விமர்சனங்களும் எழுதப்பட்டன”
இதையும் படிங்க: 201 ரன்ஸ்.. வேகத்துக்கு பயந்து வெளியேறிய வங்கதேச டெயில் எண்டர்கள்.. வெ.இ அபார வெற்றி
“ஆனால் ஆஸ்திரேலியாவில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் எப்படி சூரியகுமார் கால் தரையில் பட்டதா இல்லையா? என்று கேள்வி எழுப்ப முடியும். அதனாலேயே நம்முடைய இந்தியா நாங்கள் உங்களை தோற்கடிக்கக் கூடிய வலுவான அணி என்பதை ஆஸ்திரேலியாவுக்கு இந்த தொடரில் காண்பித்துள்ளது” என்று கூறினார். இதை அடுத்து அடுத்ததாக வரும் போட்டிகளிலும் இந்தியா போராடி வெல்வதற்கு தயாராகி வருகிறது.