
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த தொடர் முழுவதுமே சூரியகுமார் யாதவ் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக சற்று ஏமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். ஏனெனில் இதுவரை இந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 71 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக குரூப் சுற்று போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்திருந்த சூர்யகுமார் யாதவ் அதனை தவிர்த்து எஞ்சிய நான்கு போட்டியில் வெறும் 24 ரன்களை மட்டுமே குவித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இறுதிப்போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியானது இன்று இரவு துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ள வேளையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு முக்கிய அட்வைஸ் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
சூரியகுமார் யாதவ் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மிகச் சிறப்பான பேட்ஸ்மன் தான். நான் அவருக்கு சொல்வதெல்லாம் ஒரே ஒரு விடயம் மட்டும் தான் : களத்திற்கு சென்றதும் மூன்று நான்கு பந்துகளை சந்தித்து மைதானம் எப்படி இருக்கிறது? என்கிற தன்மையை கணித்து அதன்பின்னர் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவரால் சிறப்பாக விளையாட முடியும்.
ஒரு பேட்ஸ்மேனாக வெளியில் இருந்து போட்டியை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும் உள்ளே சென்றதும் மைதானம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை கணிக்க சில பந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நீங்கள் விளையாடினால் உங்களது இயல்பான ஆட்டம் வெளிவரும்.
இதையும் படிங்க : இனிமே உங்களுக்கு வாய்ப்பு வராது.. அவங்க நகர்ந்து போயிட்டாங்க.. கருண் நாயர் குறித்து – தினேஷ் கார்த்திக் பேட்டி
கேப்டனாக இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் பேட்ஸ்மேனாக சற்று ஏமாற்றத்தை அவர் அளித்துள்ளார். அதனால் இந்த இறுதி போட்டியில் அவர் 3-4 பந்துகளை எடுத்துக் கொண்டு அதன்பின்னர் அவருடைய இயல்பான ஆட்டத்திற்கு திரும்பலாம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.