WTC Final : இப்போதான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும் – எச்சரித்த சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது கடந்த சில திங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த இறுதிப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது.

அதனால் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி இம்முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஐ.சி.சி கோப்பையை கையில் ஏந்த தயாராகி வருகிறது. அதோடு கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்தவொரு ஐ .சி.சி கோப்பையையும் கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணிக்கு இம்முறை ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IND vs AUS

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்திய அணியின் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடி விட்டு தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது அவ்வளவு எளிதாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் வீரர்களுக்கு அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அதன்படி சுனில் கவாஸ்கர் கூறியதாவது : தற்போது நம்முடைய வீரர்கள் அனைவரும் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதால் அனைவரது பேட் வேகமும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகளின் போது பேட்டின் வேகம் மெதுவாக இருக்க வேண்டும். அதுவும் இங்கிலாந்து போன்ற மைதானங்களில் பந்தை அருகில் வரவிட்டு விளையாடும் அளவிற்கு கண்ட்ரோலுடன் இருக்க வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : WTC Final : ஐபிஎல் நமக்கு கவலையை தான் கொடுத்துருக்கு, அவர தவிர்த்து யாரும் தயாரா இல்ல – இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

இந்திய மைதானங்களை போன்று இல்லாமல் ஸ்விங்கிற்கு அதிகமாக ஒத்துழைக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தை சமாளித்து இந்திய அணி இந்த கோப்பையை கைப்பற்ற வீரர்கள் அனைவரும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement