- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் நல்லா ஆடணும்னா இதை பண்ணுங்க போதும்.. ரோஹித் சர்மாவிற்கு – கவாஸ்கர் அட்வைஸ்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலியா தொடர் மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ரோஹித் சர்மாவிற்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை :

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது மோசமான பேட்டிங் ஃபார்ம் தான் காரணம் என்ற சில கருத்துக்களும் நிலவி வருகின்றன. இதன் காரணமாக அவர்கள் இருவருக்குமே பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங்கில் பிரகாசிக்கவும், ஆஸ்திரேலிய மண்ணில் தடுமாற்றத்தை சந்திக்காமல் இருக்க இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா துவக்க ஓவர்களின் போது மிட்சல் ஸ்டார்க்கு எதிராக சிரமப்படுவார் என்று நினைக்கிறேன்.

இதன் காரணமாக ரோகித் சர்மா அடிக்கடி நடப்பது நல்லது. ஏனென்றால் டெஸ்ட் போட்டிகளின் துவக்கத்தில் ரோகித் சர்மாவின் கால் அடிக்கடி நகர்வது கிடையாது. எனவே ஒரே இடத்தில் நின்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதனை தவிர்க்க அவர் பந்துகளின் இடைவெளியில் கிரீசை விட்டு நடக்க வேண்டியது அவசியம். அவ்வாறு நடந்தால் கால் நகர்வுகள் மாறும்.

- Advertisement -

அதே போன்று ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் போட்டியின் துவக்கத்தில் நிதானம் என்பது மிகவும் அவசியம். ரோகித் சர்மா முதல் ஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டால் மைதானத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய தகவமைத்துக்கொள்ள முடியும். நேரம் கடந்த பின்னர் ஷாட் தேர்வுகளை சிறந்த முறையில் அவரால் செய்ய முடியும்.

இதையும் படிங்க : இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல.. இந்த தொடர் இப்படி இருந்திருக்கக்கூடாது – ஹென்றிச் கிளாசன் வருத்தம்

டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாட்கள் ஆட்டம் என்பதனால் பொறுமையாக விளையாட வேண்டியது அவசியம். எனவே அதிரடியான துவக்கத்திற்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக பேட்டிங் செய்து பெரிய இன்னிங்ஸ்ஸை அவர் கட்டமைக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -