தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வைக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெற உள்ளது.
நிறைய போட்டிகள் இருந்திருக்க வேண்டும் :
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும். இதன் காரணமாக தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் நான்கு போட்டிகள் கொண்ட தொடராக அமைந்திருக்காமல் 5 போட்டிகள் கொண்ட தொடராக அமைந்திருக்க வேண்டும் என அந்த அணியின் நட்சத்திர வீரரான ஹென்றிச் கிளாஸன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. ஏனென்றால் இது பொருத்தமான ஒன்றாக இருக்காது.
இந்த போட்டியில் நாங்கள் இந்திய அணியை வீழ்த்தினாலும் இந்த தொடரினை சமன் செய்ய தான் முடியும். இந்த தொடரில் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்காது. ஒருவேளை இந்த தொடரானது ஐந்து போட்டிகளாக அமைந்திருந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு போட்டியில் நடந்திருந்தால் அது மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆனால் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு இடையே எதிராக இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடக்கூடிய அட்டவணை மட்டுமே எங்களுக்கு தரப்படுகிறது. நிச்சயம் இது எங்களுக்கு சாதகமானது கிடையாது. ஏனெனில் இது போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடப்போகும் தொடர் பெரிய அதிக போட்டிகளை கொண்ட தொடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ 4வது டி20 நடைபெறும் வாண்ரெர்ஸ் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
இந்தியா போன்ற பெரிய நாடுகள் ஒரே நேரத்தில் உலகின் இரண்டு பகுதிகளில் விளையாடுகிறது. ஆனால் நாங்கள் மிக குறைவான போட்டிகளில் விளையாடுகிறோம். அவர் கூறியது போன்று இந்த தொடரானது ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு அணிக்கு முடிவு கிடைத்திருக்கும்.



