இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து விலகிய வாஷிங்க்டன் சுந்தர் – என்ன ஆனது அவருக்கு ?

Sundar-1
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதத் துவக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைத் தவற விட்ட இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கவுள்ளது.

INDvsENG 1

- Advertisement -

ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பங்கேற்கவுள்ள இந்திய அணி நிச்சயம் இந்த தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு போதிய பயிற்சி இன்மை தான் காரணம் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து தற்போது இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

sundar 2

கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சுந்தர் அந்த தொடரில் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தினார். அதனைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்நிலையில் தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்தார்.

sundar 1

இந்நிலையில் சுந்தர் பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்த இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது காயம் குணமடைய ஆறு வாரங்கள் ஆகும் என்கிற காரணத்தினால் நிச்சயம் அவரால் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement