ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சுந்தருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்க – இதுதான் காரணமாம்

Sundar-1
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 17 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் 31 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இவர் பெரியதாக விளையாடவில்லை. 2017 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

Sundar 2

- Advertisement -

இவருக்கு தற்போது நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியில் இடம் கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ரெகுலராக இடம் பிடித்து விளையாடி வரும் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் விளையாடிய அவரை அணியில் திடீரென தேர்வு செய்ததற்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசிக்கத் துவங்கினர்.

இந்நிலையில் அதற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது இதன் காரணமாகவே பேட்டிங் தெரிந்த ஒரு ஆல்-ரவுண்டராக சுந்தர் இருப்பதனால் அவரை ஒருநாள் அணியில் எடுத்துள்ளனர்.

sundar 2

மேலும் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் பவுலிங் செய்தது மட்டுமின்றி டாப் ஆர்டரில் பேட்டிங்கும் செய்திருந்தார். இதன்காரணமாக பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டராகவே வாஷிங்க்டன் சுந்தர் ஒருநாள் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கொஞ்சம் வெயிட் பண்ணி யோசிங்கன்னு சொன்னோம். ஆனா கோலி கேக்கல – தேர்வுக் குழு தலைவர் பேட்டி

தற்போது அறிவிக்கப்பட்ட ஒருநாள் அணியில் வெங்கடேஷ் ஐயர் இ மட்டுமே ஆல்-ரவுண்டராக இருப்பதனால் கூடுதலாக வாசிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் அணியில் இடம் பெற்று இருந்தால் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். எனவே இவர்கள் இருவரின் விலகல் காரணமாகவே சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement