கொஞ்சம் வெயிட் பண்ணி யோசிங்கன்னு சொன்னோம். ஆனா கோலி கேக்கல – தேர்வுக் குழு தலைவர் பேட்டி

chetan sharma
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது ஒருநாள் கேப்டன்சியும் பறிக்கப்பட்டது. அவரது இந்த கேப்டன் பதவி நீக்கம் குறித்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக ஒரு விவாதமாக மாறியது. மேலும் விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி :

kohli

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை விலக வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் அதை கேட்கவில்லை என்று கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி யாரும் தன்னை வலியுறுத்தவில்லை என்றும் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என தெரிவிக்கவில்லை என கோலி சமீபத்தில் ஒரு பரபரப்பு கருத்தை முன்வைத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறுகையில் : டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை நாங்கள் வரவேற்கவில்லை. மேலும் கொஞ்சம் நேரம் எடுத்து டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு அது குறித்து யோசியுங்கள் என்றும் கோலியிடம் கேட்டுக் கொண்டோம்.

Kohli

ஆனால் அதனை ஏற்காமல் கோலி தனது ராஜினாமா முடிவில் விடாப்பிடியாக இருந்தார். டி20 உலக கோப்பை முடிந்ததும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்தார். அவரை நாங்கள் கேப்டன் பதவியிலிருந்து விலகுமாறு ஒருபோதும் சொல்லவில்லை. அவராகவே முன் முன்வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இது அவருடைய தனிப்பட்ட முடிவு.

- Advertisement -

இதையும் படிங்க : அஷ்வின் மட்டுமல்ல இந்திய ஒருநாள் அணிக்கு சர்ப்ரைஸ்ஸாக தேர்வாகியுள்ள மற்றொரு வீரர் – யார் தெரியுமா?

ஆனால் இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் என இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியானது இல்லை என்பதற்காகவே ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டியின் கேப்டனாக நியமித்தோம் என சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

Advertisement