இன்றைய போட்டியில் இந்திய அணியின் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இவர்கள் தானாம் – கோலியின் திட்டம்

Ind-1

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Cup

இந்நிலையில் தற்போது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மாற்றம் குறித்து பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்திய அணியில் மனிஷ் பாண்டே மற்றும் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்ந்து இருக்கும் பட்சத்தில் இன்றைய போட்டியில் பந்து வீச்சாளர்களின் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் சாஹல் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைக்க இருப்பதால் அதற்கான வாய்ப்பு கிடைக்குமா ? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sundar

ஆனால் கோலியின் திட்டம் முற்றிலும் வேறாக உள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் இருந்து குல்தீப் மற்றும் சுந்தரையே அவர் இலங்கை தொடருக்காக தேர்வு செய்து வருகிறார். ஏனெனில் அதற்கான காரணம் அவரிடம் உள்ளது இலங்கை அணியிடம் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக குல்தீப் மற்றும் சுந்தர் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதனால் அவர்கள் இருவரையுமே தேர்வு செய்து வருகிறார்.

- Advertisement -

சுந்தர் பொதுவாக பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக வீசுவதாலும், குல்தீப் மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசுவதால் அவர்கள் இருவருமே இந்த போட்டியிலும் தொடர்வார்கள் என்றும், மேலும் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி என்பதால் கோலி எவ்வித புது முயற்சியும் எடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.