ஐபிஎல் 2022 : இந்த சீசனுக்கான சன் ரைசர்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி இதோ – எப்படி இருக்கு சொல்லுங்க?

SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய அம்சமாக இந்த வருடத்திற்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்கும் 590 வீரர்களை தேர்வு செய்ய அனைத்து 10 அணிகளும் தயாராகி வருகின்றன.

srh

- Advertisement -

ஒரு சில அணிகள் தாங்கள் விரும்பாத வீரர்களை விடுவித்து புதிய வீரர்களை இந்த ஏலத்தின் வாயிலாக தேர்வு செய்து கோப்பையை கைப்பற்ற திட்டமிட்டுள்ளன. இன்னும் ஒருசில அணிகள் தங்களின் கேப்டனை இந்த ஏலத்தின் வாயிலாக தேர்வு செய்ய உள்ளன.

சன் ரைசர்ஸ்:
அந்த அடிப்படையில் பார்க்கும்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடந்த பல வருடங்களாக முதுகெலும்பாக செயல்பட்டு வந்த வீரர்களை இந்த முறை விடுவித்துள்ள அந்த அணி நிர்வாகம் பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்கு கேப்டன்சிப் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் கழட்டி விட்டது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

kxipvssrh

ஏனென்றால் 2016ஆம் ஆண்டு அந்த அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த அவர் ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 500 ரன்களுக்கு மேல் எடுத்து வந்தார். 2015 – 2020 வரையிலான காலகட்டங்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அதிக ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆரஞ்சு தொப்பியை (3) வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இருப்பினும் 2021 சீசனில் முதல் முறையாக ரன்கள் குவிக்க தடுமாறிய அவரை முதலில் கேப்டன் பதவியிலிருந்து பாதியிலேயே நீக்கிய சன் ரைசர்ஸ் நிர்வாகம் அதன் பின் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து அவரை கழற்றி விட்டது. இதனால் மனமுடைந்த அவர் தற்போது வேறு அணிக்காக விளையாட தயாராகிவிட்டார்.

- Advertisement -

புதிதாக மாறும் ஹைதராபாத்:
அது மட்டுமல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் போன்ற வீரர்களையும் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. மாறாக கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் அப்துல் சமட், உம்ரான் மாலிக் போன்ற அனுபவம் இல்லாத 2 வீரர்களை தக்க வைத்துள்ளது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது அணியில் உள்ள வீரர்களை மொத்தமாக மாற்றி புதிய அணியுடன் கோப்பையை கைப்பற்ற அந்த அணி நிர்வாகம் முயற்சிப்பது தெரிய வருகிறது.

SRH

இத்துடன் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர்கள் பொறுப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஜாம்பவான் பிரையன் லாரா, தென்ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டைன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சைமன் கேடிச் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இதிலிருந்தே ஐபிஎல் 2022 தொடரை புத்துணர்ச்சியுடன் புது வீரர்களுடன் சந்திக்க அந்த அணி நிர்வாகம் தயாராகி வருகிறது தெளிவாக தெரிகிறது.

புதிய ஜெர்ஸி:
இந்நிலையில் தங்களது அணியை புதுப்பித்து புத்துணர்ச்சி அளித்து புதுப்பொலிவுடன் உருவாக்க நினைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தற்போது ஐபிஎல் 2022 தொடருக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஜெர்சியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள புதிய வடிவமைப்பின் படி கை பகுதியை தவிர ஏனைய அனைத்து பாகங்களிலும் முழுக்க முழுக்க ஆரஞ்சு வண்ணத்தில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த புதிய ஜெர்ஸி இதோ:

SRH Jersey IPL 2022

ஆனால் ஏற்கனவே இருந்த ஜெர்சியில் கை மற்றும் கால் பகுதிகள் முழுவதும் ஆரஞ்சு கலந்த கருப்பு வண்ணமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த புதிய ஜெர்சியை பார்த்த பல ரசிகர்கள் இதற்கு பழைய ஜெர்ஸி எவ்வளவோ பரவாயில்லை என சமூக வலைதளங்களில் சலிப்புடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement