நல்ல கேப்டன்கள் தான். ஆனால் பாவம் உலகக்கோப்பையை தான் வெல்ல முடியவில்லை – அதிர்ஷ்டம் இல்லாத 5 கேப்டன்கள்

Captains
- Advertisement -

கிரிக்கெட் போட்டியில் 11 பேர் விளையாடினாலும் கேப்டன் என்பவருக்கு கூடுதல் பொறுப்புகளும் கூடுதல் திறமைகளும் வேண்டும். ஒரு சராசரி விளையாட்டு வீரர்களைப் போல் அவரால் ஆட முடியாது, என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஒவ்வொரு போட்டியிலும் சரியாக செயல்பட வேண்டும். எவ்வளவு தான் சரியாக செயல்பட்டாலும் அவ்வப்போது தோல்விகள் ஏற்படத்தான் செய்யும். அதற்கு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். இது போன்ற பல சிக்கலான சவால்களை அவ்வப்போது எதிர் கொண்டே இருக்க வேண்டும். இப்படி பல சவால்களை சமாளித்து ஒருநாள் தொடர்களில் அற்புதமாக விளையாடியும் உலகக்கோப்பையை வெல்ல முடியாத ஐந்து தரமான கேப்டன்களைப் பற்றி பார்ப்போம்.

Jayawardene

- Advertisement -

மகிளா ஜெயவர்த்தனே :

இலங்கை அணியின் மிகச்சிறந்த ஆட்டக்காரர் இவர். இவரது காலகட்டத்தில் இருந்த மிகவும் ஸ்மார்ட்டாக கேப்டன களில் இவரும் ஒருவர். இவரது தலைமையில் இலங்கை அணி 129 போட்டிகளில் பங்கேற்று 71 போட்டியில் வென்றது. 2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இவரது தலைமையில் இலங்கை அணி முன்னேறியது. ஆனாலும் தோல்வியை சந்தித்தது. 2009 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தைதிலும் பங்கேற்ற ஜெயவர்த்தனேவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது

கிரேம் ஸ்மித் :

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக 2003ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இருந்தார். இவரது காலகட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி 150 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று அபாரமாக 92 வெற்றிகளைப் பெற்றது. இவரின் தலைமையில்தான் தென்ஆப்பிரிக்கா அணி 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும், 2007, 2009, 2010ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் 2006 மற்றும் 2009-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் பங்கேற்றது. இவ்வளவு ஐசிசி தொடர்களில் பங்கேற்றும் இதில் ஒரு கோப்பையை கூட அவரால் வெல்ல முடியவில்லை. இதன் காரணமாகத்தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரை குத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

inzamam

இன்ஸமாம் உல் ஹக் :

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்.இவரது தலைமையில் 90 போட்டிகளில் பங்கேற்று 52 வெற்றி பெற்றுள்ளது. 34 போட்டிகளில் மட்டுமே இவரது தலைமையில் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இவரும் ஒரு உலகக் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஏபி டிவில்லியர்ஸ் :

- Advertisement -

கிரிக்கெட் உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர் ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர் தென்ஆப்பிரிக்க அணி இவரது தலைமையில் 150 போட்டிகளில் பங்கேற்று 59 போட்டிகளில் வெற்றி பெற்ற.து இவரின் வெற்றி சராசரி 60 சதவீதமாக இருந்தாலும் சர்வதேச ஐசிசி தொடர்களில் இவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி சொதப்பி மட்டுமே இருக்கிறது. இவரால் ஒரு உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

abd

விராட் கோலி :

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து விதமான தொடர்களிலும் அபாரமாக சாதித்து வருகிறது இந்திய அணி. இவர்கள் தற்போது வரை இந்திய அணி 89 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 71.82% ஆக உள்ளது. விராட் கோலியின் தலைமையில் 2017 சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 2019 உலக கோப்பை தொடரில் களமிறங்கியது. இருந்தாலும் அவரால் ஒரு உலகக் கோப்பை தொடரை வெல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம்.

Advertisement