- Advertisement -
ஐ.பி.எல்

வேற வழியில்ல இதுக்காக அஸ்வினை சிஎஸ்கே கழற்றி விட்டாகனும்.. சாம்சன் வந்தா குழப்பமாகும்.. பத்ரிநாத் பேட்டி

ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரில் கம்பேக் கொடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் அந்த அணி கடந்த 2 தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறவில்லை. அதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய சென்னை முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பரிதாபமாக வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் ரவிசந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. 2010, 2011 கோப்பைகளை சென்னை வெல்ல உதவிய அவர் 2015க்குப்பின் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். கடந்த வருடம் 9.75 கோடி என்ற பெரியத் தொகைக்கு சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அஸ்வினை கழற்றி விடலாம்:

இருப்பினும் அதற்கு நேர்மாறாக விளையாடிய அஸ்வின் மிகவும் சுமாராக பவுலிங் செய்தார். இந்நிலையில் அஸ்வினுடைய அனுபவம் உதவும் என்றாலும் மற்ற வீரர்களை வாங்க பணம் தேவை என்பதால் சிஎஸ்கே அவரை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். அதே போல தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்குவது பிராண்ட் இமேஜில் குழப்பத்தை உண்டாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு மதிப்பை சேர்ப்பார் என்று நான் கருதுகிறேன். ஆனால் அது 10 கோடியில் இருக்கக் கூடாது. நீங்கள் வீரரின் தற்போதைய நிலை மற்றும் அவருடைய சம்பளத் தொகையையும் பார்க்க வேண்டும். அந்த வகையில் அஸ்வின் கண்டிப்பாக தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இல்லை”

- Advertisement -

பத்ரிநாத் கருத்து:

“அதனாலேயே அவரை விடுவிக்க வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது நமக்குத் தெரியாது. அது பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. தோனி ஒரு சில போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடக்கூடும். அது பிராண்டின் மதிப்பு பற்றியது. அவர் சில பிராண்டை ஈர்க்கக்கூடியவர்”

இதையும் படிங்க: என்னை மாதிரி உலகில் யாருக்கும் அந்த சீட் கிடைச்சுருக்காது.. சிராஜ் வீசிய மாஸ் பந்து குறித்து அம்பயர் தர்மசேனா

“எனவே தன்னுடைய ஓய்வு குறித்து அவர் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் வெளியிடலாம். அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் வந்தால் அது குழப்பத்தை உண்டாக்கும் என்பதே என்னுடைய உணர்வாக இருக்கிறது” என்று கூறினார். மொத்தத்தில் இந்தியாவுக்காக விளையாடாததால் சிஎஸ்கே அணி அடுத்த வருடம் அஸ்வினை கழற்றி விடும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -