சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பிரபல இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஒய்வு பெற போவதாக ஒரு சில தகவல்கள் பரவி வருகிறது. தமிழக வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் இந்தியாவிற்காக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். விரைவில் இவரது ஒய்வு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று பிரபல டைம்ஸ் நாளிதழில் குறிப்பிட்டுள்ளதாக சில செய்திகளும் பரவி வருகிறது.
சுப்பிரமணியம் பத்ரிநாத், 1980 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் தனது கிரிக்கெட் பயணத்தை 2000 ஆம் ஆண்டு தமிழ் நாடு அணியில் தொடங்கினார். தமிழ் நாடு கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடிய இவர் தனது பர்ஸ்ட் கிளாஸ் கேரியரில் 104 போட்டிகளில் 7836 ரன்களை குவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக ஒரே போட்டியில் 250 ரன்களை எடுத்துள்ளார்.
தனது பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் கேரியரில் பத்தாயிரம் ரன்களை கடந்த பத்ரிநாத் சர்வதேச போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயப்படுத்திக் கொள்ளவில்லை. இதுவரை 7 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 2 டெஸ்ட் தொடர்கள் மற்றும் 1 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பத்ரிநாத், இதுவரை இந்த 3 பிரிவு ஆட்டத்திலும் ஒரு அரை சதத்தை கூட அடித்தது இல்லை.
தமிழக அணியில் இவரை சிறப்பாக விளையாடி வந்ததாள் இவருக்கு 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தொடர்ந்து 5 ஆண்டுகள் சென்னை அணியில் விளையாடி வந்தார். 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தனது சர்வதேச முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார். அதற்கு பின்னர் 2010 ஆண்டு தென்னாப்பிரிகாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.