5 கோடிக்கு இவர் வொர்த் இல்ல. இந்த சீஸனின் மட்டமான தேர்வு இவருடையது தான் – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

Scott-Styris
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த 16-ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் கலந்துகொண்ட 10 அணிகளும் தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை சரியாக கணித்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். இந்த மினி ஏலமானது ரசிகர்களின் மத்தியிலும் பெரிய வரவேற்பினை பெற்றது.

Auction

- Advertisement -

இந்த ஏலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் கலந்துகொண்ட நிலையில் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுடைய விலை என்பது மிகவும் உச்சத்தை தொட்டது. அதேவேளையில் சில குறிப்பிட்ட வீரர்கள் தங்களது தகுதிக்கும் மீறி பெரிய விலைக்கு சென்ற சுவாரசியமான நிகழ்வும் நடைபெற்றது.

அந்தவகையில் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் சாம் கரன் 18.50 கோடிக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் க்ரீன் 17.50 கோடிக்கும், பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கும் ஏலத்தில் சென்றனர். இவர்களுக்கான போட்டியும் இந்த ஏலத்தில் பெரிய அளவு சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Klassen

அதோடு இவர்களை தவிர்த்து சில குறிப்பிட்ட வீரர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போனது அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் நிக்கோலஸ் பூரான் 16 கோடிக்கும், ஹென்றிச் கிளாசன் 5.25 கோடிக்கு ஏலம் போனார். இந்நிலையில் கிளாசன் பெற்ற இந்த தொகையானது அவருக்கு நிகரில்லை என்றும் இது மோசமான தேர்வு என்றும் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் அவரது தேர்வு குறித்து விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐ.பி.எல் ஏலத்தில் என்னை பொறுத்தவரை ஹென்றிச் கிளாசன் தேர்வு தான் மோசமானது என்று நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கிளாசன் பெங்களூரு அணிக்காக 50 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலையில் வாங்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது மோசமான செயல்பாடு காரணமாக அவரை பெங்களூரு அணி கழற்றிவிட்டது.

இதையும் படிங்க : இதை மட்டும் செஞ்சா நீங்க தான் ராகுலுக்கு பதில் 2023 உ.கோ’யில் விளையாடுவீங்க – இளம் அதிரடி வீரருக்கு பிரட் லீ பாராட்டு அறிவுரை

இந்நிலையில் அவரை இந்த ஆண்டு சன் ரைசர்ஸ் 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் ஏலத்திலேயே எடுக்கப்பட்ட மோசமான தேர்வு இதுதான் என ஸ்டைரிஸ் அவரை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement