- Advertisement -
உலக கிரிக்கெட்

2010க்குப்பின் மோசமான ஆஸியை.. இங்கிலாந்து அலற விடப்போறதை பாருங்க.. வார்னருக்கு ப்ராட் பதிலடி

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதும் அத்தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற வழக்கமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அவ்விரு அணிகளைப் பொறுத்த வரை இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா வலுவான அணி என்பதை அனைவரும் அறிவோம்.

அதற்கு சான்றாக 2010 – 11 தொடருக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து ஒருமுறை கூட ஆஷஸ் கோப்பையை வென்றதில்லை. சொல்லப்போனால் அத்தொடருக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்லவில்லை. அதனால் இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா வெல்லும் என்பது அந்நாட்டவர்களின் கணிப்பாக இருக்கிறது.

- Advertisement -

2010க்குப்பின் மோசமான ஆஸ்திரேலியா:

இருப்பினும் இம்முறை பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோற்கடிப்போம் என்று இங்கிலாந்தினர் சொல்லி வருகின்றனர். அந்த சூழ்நிலையில் இம்முறை 4 – 0 அல்லது 3 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று டேவிட் வார்னர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு.

“விசித்திரமாக சிந்திக்க மாட்டீர்கள். (வார்னர் சொன்னது) அது உண்மையில் ஒரு கருத்து அல்ல. 2010ஆம் ஆண்டு கடைசியாக இங்கிலாந்து வென்ற தொடருக்குப்பின் தற்போதைய ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும் 2010 தொடருக்குப்பின் தற்போதைய இங்கிலாந்து அணி சிறந்ததாக இருக்கிறது. எனவே இந்த விஷயங்கள் இம்முறை ஆஷஸ் அற்புதமாக இருக்கப் போகிறது என்பதற்கு பொருத்தமாக இருக்கிறது”

- Advertisement -

ப்ராட் பதிலடி:

“ஆஸ்திரேலியா நீண்ட காலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பொதுவாக அவர்களுடைய அணியில் யார் எங்கே விளையாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது அது அவர்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. இதே போன்ற நிலைமை தான் கடைசியாக 2010 – 11இல் இங்கிலாந்து கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலிய அணியில் நிலவியது”

இதையும் படிங்க: விராட், ரோஹித் இல்லை.. தனது ஆல் டைம் ஆஸி – இந்தியா கனவு ஒருநாள் அணியை வெளியிட்ட கமின்ஸ்

“ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் தோற்க மோசமான அணியாக இருக்க வேண்டும். அவர்களை வீழ்த்த இங்கிலாந்து நல்ல அணியாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான உண்மையாகும். அந்த வகையில் இம்முறை ஆஸ்திரேலியா மோசமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இங்கிலாந்து சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் 2010க்குப்பின் தற்போது இருப்பது தான் ஆஸ்திரேலியாவின் மிகவும் பலவீனமான அணியாகும். இதுவே உண்மையாகும்” என்று கூறினார்.

- Advertisement -