சக்ஸஸ் பண்ணிட்டீங்க.. தம்மை போலவே பெய்ல்ஸ் மேஜிக் செய்த விராட் கோலியை.. வாழ்த்திய ஸ்டூவர்ட் ப்ராட்

Stuart Broad Virat Kohli Bails
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட தாண்டாத நிலையில் கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 256/5 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 140* ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

- Advertisement -

வாழ்த்திய ப்ராட்:
முன்னதாக இந்த போட்டியில் டோனி டீ ஜோர்சி – டீன் எல்கர் ஆகியோர் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு பெரிய தொல்லை கொடுத்தனர். அப்போது பும்ரா வீசிய 29வது ஓவரின் 4வது பந்துக்கு முன்பாக தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த நிலையில் விராட் கோலி ஸ்டம்ப் மீதிருந்த பெய்ல்ஸை மாற்றி வைத்தார்.

அதாவது நம்மில் பலரும் சோதனையான நேரங்களில் அதிர்ஷ்டத்திற்காக செய்யக்கூடிய சிறு சிறு மாற்றங்களைப் போல அந்த இடத்தில் விராட் கோலி விக்கெட் விழ வேண்டும் என்ற எண்ணத்துடன் பெய்ல்ஸை மாற்றி வைத்தார். சொல்லப்போனால் கடந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய ஓய்வு பெறும் கடைசி போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் இதே போல பெய்ல்ஸ் மாற்றி வைத்து விக்கெட்டை எடுத்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

அதே மேஜிக்கை அந்த தருணத்தில் விராட் கோலி இந்தியாவுக்காக செய்து பார்த்தார். ஆச்சரியமாக அடுத்த 2 பந்துகளிலேயே அவருடைய நம்பிக்கை வீணாகாத வகையில் டீ ஜோர்சியை அவுட்டாக்கிய பும்ரா அடுத்த ஓவரில் அடுத்ததாக வந்த கீகன் பீட்டர்சனையும் அவுட்டாக்கி குறுகிய இடைவெளியில் 2 விக்கெட்களை எடுத்து திருப்பு முனையை உண்டாக்கினார். அந்த வகையில் நம்பிக்கையுடன் பெய்ல்ஸை மாற்றி வைத்த விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் கை கை கொடுத்தது ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: ஒரு மணி நேரம் லேட்டானாலும் பரவால்ல.. என் ரசிகர்களுக்காக அதை செய்றேன்.. தல தோனி ஓப்பன்டாக்

அந்த தருணத்தை ஆஷஸ் தொடரில் ஸ்டுவர்ட் ப்ராட் விக்கெட்டை எடுத்த தருணத்துடன் ஒப்பிட்டு லண்டனின் பிரபல விஸ்டன் பத்திரிகை தங்களுடைய ட்விட்டரில் (எக்ஸ்) பதிவிட்டிருந்தது. அதை பார்த்த ஸ்டுவர்ட் ப்ராட் மகிழ்ச்சியுடன் “வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் விராட் கோலி” என்று வாழ்த்தும் வகையில் பதிலளித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement