- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரொம்ப தேங்க்ஸ் கில் தம்பி.. இங்கிலாந்தின் வெற்றிக்கு நீங்க வெச்ச நெருப்பே காரணம்.. ஸ்டுவர்ட் ப்ராட் மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் வீழ்த்திய இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மீண்டும் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அந்தப் போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ராகுல் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர்த்து மற்ற டாப் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் கடைசியில் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து ஜடேஜா 61* ரன்கள் எடுத்தும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் நீண்ட காலமாக தூங்கிக் கிடந்த இங்கிலாந்தை இப்போட்டியில் இந்திய கேப்டன் கில் நெருப்பாக மாற்றியதே வெற்றிக்கு காரணம் என்று ஸ்டுவர்ட் ப்ராட் மறைமுகமாக கூறியுள்ளார்.

- Advertisement -

ரொம்ப தேங்க்ஸ் கில்:

குறிப்பாக 3வது நாள் மாலையில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்ததற்காக ஜாக் கிராவ்லியை கைநீட்டி சில கெட்ட வார்த்தைகளை சொல்லி கில் திட்டியது மொத்த இங்கிலாந்து அணியையும் நெருப்பாக மாற்றியதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பிராட் பேசியது பின்வருமாறு. “ஆர்ச்சர் மிகவும் போட்டி மிகுந்த கேரக்டர்”

“அழுத்தமான பெரிய சூழ்நிலைகளில் அவர் தன்னுடைய ஆட்டத்தில் உயர்ந்து நிற்கக் கூடியவர். அந்த குறிப்பிட்ட ஓவரில் ஜாக் கிராவ்லியை இந்திய அணியினர் டார்கெட் செய்ததே இங்கிலாந்தை நெருப்பாக மாற்றியது. அந்த வேடிக்கையான விஷயத்தைப் பற்றி நாம் பேசினோம். ஆனால் கிராவ்லி, டக்கெட் போன்ற தங்களுடைய அணியின் ஒரு வீரர் அது போன்ற சூழ்நிலையில் இருப்பதை ஆர்ச்சர் விரும்ப மாட்டார்”

- Advertisement -

ப்ராட் மகிழ்ச்சி:

“கடைசியாக இங்கிலாந்து அணியை இப்படி வாய் மொழியாக செயல்பட்டு பார்த்து எனக்கு நினைவில்லை. நித்திஷ் ரெட்டிக்கு எதிராக ஆர்ச்சர் பவுன்சர்களை வீசினார். அப்போது அவரைச் சுற்றி அனைத்து இங்கிலாந்து வீரர்களும் சென்று அழுத்தத்தை உண்டாக்கினர். அவை அனைத்தும் மூன்றாவது நாளின் கடைசி ஓவரில் துவங்கியது”

இதையும் படிங்க: 100 ஆவது டெஸ்ட் போட்டியில் வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்திய மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ

“அதற்கு பதிலடியாக பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக நிறைய வார்த்தைகளை சொல்லி இந்திய பேட்ஸ்மேன்களின் மனதளவிலான பலத்துடன் விளையாடினார். அவர் அவர்களுடைய மனநிலையை மாற்ற முயற்சித்தார். இங்கிலாந்து அணியும் அதைப் பின்பற்றியது வெற்றிக்கு உதவியது” என்று கூறினார். இதிலிருந்து சுப்மன் கில் செயலுக்கு ரொம்ப தேங்க்ஸ் தம்பி என்று ப்ராட் மறைமுகமாக மகிழ்ச்சியைத் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -