யூஸ் பண்ணுங்கன்னு ஸ்டீவ் ஸ்மித்துக்கு மெசேஜ் பண்ணிட்டேன்.. மயங் யாதவ் பற்றி ஸ்டுவர்ட் ப்ராட் பாராடு

Stuart Broad 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தோற்கடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ குயிண்டன் டீ காக் 54, நிக்கோலஸ் பூரான் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 70, ஜானி பேர்ஸ்டோ 42 ரன்கள் எடுத்ததால் நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் அப்போது அவர்களை அவுட்டாக்கிய மயங் யாதவ் 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து பஞ்சாப் கையில் வைத்திருந்த வெற்றியை பறித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ப்ராட் பாராட்டு:
இத்தனைக்கும் 21 வயது மட்டுமே நிரம்பிய அவர் இந்த போட்டியில் தான் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஆரம்பம் முதலே 145 – 150 கி.மீ வேகத்தில் நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி துல்லியமாக பந்து வீசிய அவர் தவானுக்கு எதிராக 155.80 கி.மீ வேகப்பந்தை வீசினார். அதன் வாயிலாக இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 2024 – 25 பார்டர் – காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மயங் யாதவ் வந்தால் வலைப்பயிற்சியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஸ்டீவ் ஸ்மித்துக்கு மெசேஜ் அனுப்பியதாக ஸ்டூவர்ட் பிராட் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் இயற்கையாக வேகம் இருக்கிறது. ஆனால் ஒரு இளம் பவுலராக அவரிடம் கட்டுப்பாடான லைன் மற்றும் லென்த் இருப்பது அபாரமானதாகும்”

- Advertisement -

“சில நேரங்களில் ஒரு இளம் பவுலராக நீங்கள் உணர்ச்சியுடன் ஆரம்பத்திலேயே அதிரடியான வேகத்தில் பந்து வீச முயற்சிப்பீர்கள். ஆனால் இவரிடம் கட்டுப்பாடான லைன் இருப்பது அருமை என்று நினைக்கிறேன். அவருக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோ ஒரு அருமையான ஷாட்டை அடித்தார். ஆனால் அதைத் தவிர மயங் யாதவ் பேட்ஸ்மேன்களுக்கு எதையும் கொடுக்கவில்லை”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணி சக்ஸஸா இருக்க காரணமும், ஆர்.சி.பி அணி தடுமாற காரணமும் இதுதான் – ஹர்பஜன் சிங் கருத்து

“குறிப்பாக ஜானி பேர்ஸ்டோ போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் தடுமாறுகிறார் என்றால் இவரிடம் ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அவரைப் போன்ற வேகப்பந்து வீச்சாளர் ஆட்டநாயகன் விருது வெல்வது என்னுடைய முகத்தில் புன்னகையை உண்டாக்குகிறது. நீங்கள் அதிகம் சிந்திக்க கூடாது. ஆனால் இந்தப் பையனை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பார்த்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித்துக்கு மெசேஜ் அனுப்பி விட்டேன்” எனக் கூறினார்.

Advertisement