இந்திய கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த பிரபல ஆல்ரவுண்டர் – ரசிகர்கள் வருத்தம்

Binny
- Advertisement -

இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக கடந்த 2014 – ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானவர் ஸ்டூவர்ட் பின்னி. 37 வயதான இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 14 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 459 ரன்களையும், 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Binny 3

- Advertisement -

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீரரான ரோஜர் பின்னி மகனான இவர் கர்நாடக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி படிப்படியாக தனது திறனை உயர்த்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். இருப்பினும் அவரால் 2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தற்போது ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அவர் டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த பந்துவீச்சு தான் இன்றளவும் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாக உள்ளது. ரோஜர் பின்னியின் மகனான இவர் பிரபல விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் மாயந்தி லாங்கரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Binny

2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பின்றி இருந்து வரும் ஸ்டூவர்ட் பின்னி தனது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் : நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Binny 1

அவரின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு சற்று வருத்தமான விடயமாகவே மாறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடியது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் 2010 மாதம் முதல் 2019 ஆம் ஆண்டுவரை 95 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement