ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற 8வது போட்டியில் சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் சென்னையை அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்து சாதனை படைத்தது. மறுபுறம் 197 ரன்களை அடிக்க முடியாத சென்னை இந்த வருடத்தில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்தது.
இந்நிலையில் கடந்தப் போட்டியில் 156 ரன்களை அடிக்க 20 ஓவர்கள் எடுத்துக்கொண்ட சென்னை இந்தப் போட்டியில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறுபுறம் ஹைதராபாத் போன்ற அணிகள் 20 ஓவரில் 280 ரன்கள் அடித்து எதிரணிகளை மிரட்டி வருகின்றன. எனவே இந்த காலம் கடந்த பழைய பேட்டிங் அணுகுமுறையை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்ல முடியுமா? என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் செய்தியாளர் கேட்டார்.
பயர்பவர் இல்லையா:
அதற்கு சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ஃபயர் பவர் இல்லை என்று யார் சொன்னார்கள்? என கோபமாக பதிலளித்த அவர் கடைசியில் கோப்பையை வெல்லும் போது அது தெரியும் என்றும் செய்தியாளரை சாடினார். மேலும் சேப்பாக்கம் தங்களுடைய கோட்டை கிடையாது என்றும் தெரிவித்த பிளமிங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஃபயர் பவர் பற்றி பேசுகிறீர்கள். எங்களிடமும் அந்த ஃபயர் பவர் இருக்கிறது”
“உங்களது கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதல் பந்திலேயே கண்மூடித்தனமாக நாங்கள் பேட்டை சுழற்றாத காரணத்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தாலும் நீங்கள் இப்படி கேட்கிறீர்கள். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பாருங்கள். நாங்கள் விளையாடுவது கிரிக்கெட்டின் நேர்மறையான பிராண்ட்டாகும்”
கோட்டை கிடையாது:
“எனவே நீங்கள் சில்லியான கேள்வியை கேட்கிறீர்கள். சேப்பாக்கத்தில் எங்களுக்கு சொந்த மண் சாதகம் எதுவும் இல்லை என்று நீண்ட வருடங்களாக நாங்கள் சொல்லி வருகிறோம். சென்னைக்கு வெளியேயும் நாங்கள் போட்டிகளை வென்றுள்ளோம். உண்மையில் சேப்பாக்கத்தில் உள்ள பிட்ச்களை சமீப காலங்களாக எங்களால் கணிக்க முடியவில்லை”
இதையும் படிங்க: தோத்தது கூட பரவாயில்ல.. ஆனா தல இப்படி பண்ணத ஏத்துக்கவே முடியல – வருத்தத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள்
“கடந்த சில வருடங்களாகவே அதை எங்களால் சரியாகக் கணிக்க முடியவில்லை. அது களத்திற்கு சென்று 4 ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவதற்கு பழைய சேப்பாக்கம் பிட்ச் கிடையாது. இங்கே உள்ள ஒவ்வொரு பிட்ச்சையும் கணிப்பதற்கு நாங்கள் கடினமாக வேலை செய்கிறோம். அது வித்தியாசமாக இருக்கிறது” என்று கூறினார்.



