சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த தொடரின் ஆரம்ப போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்திய அவர்கள் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணியும் வீழ்த்தி இரண்டு வெற்றிகளுடன் இந்த தொடரினை பிரமாதமாக துவங்கியுள்ளனர்.
தோனியால் ஏமாற்றமடைந்த சென்னை ரசிகர்கள் :
அதே வேளையில் தங்களது முதல் போட்டியில் மும்பை அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்திய சிஎஸ்கே அணி நேற்றைய போட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தை அளித்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 196 ரன்களை குவிக்க சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒன்பதாவது வீரராக களமிறங்கிய தோனி 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 30 ரன்கள் குவித்து இருந்தாலும் அவரது இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியின் போது ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தபோது எட்டாவது வீரராக தோனி களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு முன்னதாக அஸ்வின் களமிறங்கினார். கிட்டத்தட்ட ஏழு ஓவர்கள் மீதம் இருக்கும் வேளையில் தோனி முன்கூட்டியே வந்திருந்தால் நிச்சயம் சென்னை அணி தோல்வியை சந்தித்து இருந்தால் கூட ரன் ரேட் வகையில் பெரிய பின்னடைவை சந்தித்து இருக்காது. ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி வெகு சில பந்துகளை மட்டுமே சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதையும் படிங்க : பெங்களூரு அணியிலிருந்து 2009இல் போய் 2025இல் கம்பேக் கொடுத்த புவனேஸ்வர் குமார்.. வினோதமான உலக சாதனை
தோனியின் ஆட்டத்தை பார்க்கவே மைதானத்திற்கு நேரில் வரும் ரசிகர்கள் இப்படி ஒரு சில பந்துகளை மட்டுமே தோனி விளையாடுவதை தவிர்த்து முன்கூட்டியே வந்து விளையாட வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



