பெங்களூரு அணியிலிருந்து 2009இல் போய் 2025இல் கம்பேக் கொடுத்த புவனேஸ்வர் குமார்.. வினோதமான உலக சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 51, விராட் கோலி 31 ரன்கள் எடுத்த நிலையில் சென்னைக்கு அதிகபட்சமாக 3 நூர் அஹ்மத் விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய சென்னை ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் தரமான பந்து வீச்சில் சுமாராக விளையாடியது. அதனால் 20 ஓவரில் 146-8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்த சென்னைக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41, தோனி 30* ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பெங்களூருவில் புவி:

அதனால் இத்தொடரில் பெங்களூரு தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதை விட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை 17 வருடங்கள் கழித்து தோற்கடித்த பெங்களூரு மோசமான சோகத்தை நிறுத்தியது. முன்னதாக இந்தப் போட்டியில் பெங்களூரு அணிக்காக நட்சத்திர வீரர் புவனேஸ்வர் குமார் 16 வருடங்கள் கழித்து விளையாடினார்.

கடைசியாக 2009ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் அதன் பின் புனே, ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். அந்த சூழ்நிலையில் 2025இல் புவனேஸ்வர் குமார் மீண்டும் பெங்களூரு அணிக்காக விளையாட வாங்கப்பட்டுள்ளார். இதற்கிடைப்பட்ட காலங்களில் பெங்களூரு அணி 238 போட்டிகளில் விளையாடியுள்ளது.

- Advertisement -

வினோத சாதனை:

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே நிறைய போட்டிகளைத் (238) தவற விட்ட வீரர் என்ற உலக சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார். இதற்கு முன் இதே பெங்களூரு அணிக்காக 2009 – 2023 காலகட்டங்களில் கரன் சர்மா 225 போட்டிகளை விளையாடாமல் தவற விட்டதே முந்தைய சாதனை. இந்த வினோத சாதனைப் பட்டியலில் கொல்கத்தாவுக்கு 206 போட்டிகள் தவற விட்ட மந்தீப் சிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: 3 முறை கோட்டை விட்ட சி.எஸ்.கே வீரர்கள்.. பதிலடி கொடுத்து சாதனை நிகழ்த்திய ரஜத் பட்டிதார் – விவரம் இதோ

இங்கிலாந்தைச் சேர்ந்த பென்னி ஹோவேல் ஹாம்ப்ஷைர் அணிக்காக 2011 – 2023 காலகட்டங்களில் 164 போட்டிகளைத் தவற விட்டு 4வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் ஷிகர் தவான் 2008 – 2019 காலகட்டங்களில் டெல்லி அணிக்காக 150 போட்டிகளை விளையாடாமல் தவற விட்டு ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அந்த வகையில் பெங்களூரு அணிக்காக தனது கம்பேக் போட்டியில் 3 ஓவரில் 20 ரன்கள் மட்டும் கொடுத்த புவனேஸ்வர் 1 விக்கெட் எடுத்து அசத்தினார்.

Advertisement