இவரை கொஞ்சம் விட்டாலும் எதிரணியை நாசம் செய்துவிடுவார். நான் கண்டு பயந்த இந்திய பேட்ஸ்மேன் இவரே – ஸ்டெயின் ஓபன் டாக்

- Advertisement -

இந்தத் தலைமுறை கிரிக்கெட் டில் மிகச்சிறந்த பாஸ்ட் பவுலர்கள் லிஸ்டில் முன்னணி இடம் வகிப்பவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த டேல் ஸ்டெயின். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானான வாசிம் அக்ரமை போல 150 கிலோ மீட்டர் வேகத்திலும் ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர். டேல் ஸ்டெயின் தென் ஆப்பிரிக்க அணி கடந்த 16 ஆண்டுகளாக தனது சிறப்பான பந்துவீச்சை வழங்கி வருகிறார்.

Steyn

- Advertisement -

2004ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்டெயின் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளையும், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளையும், 47 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் .மேலும் அது மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் தான் பங்கேற்கும் அணிகளுக்கு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

தனது கிரிக்கெட் கரியரில் அதிகமான காயங்களால் அவதிப்பட்ட அவரால் நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அவர் கரியரில் காயம் ஏற்படுத்திய வெற்றிடம் மட்டும் இல்லையென்றால் அவர் நிச்சயம் ஏகப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார் என்பது உறுதி. சர்வதேசப் போட்டிகளில் சச்சின், டிராவிட், கங்குலி, தோனி, பாண்டிங், கோலி, ரோகித், ஸ்மித், வில்லியம்சன், ரூட், மெக்கல்லம் என பல்வேறு சிறந்த பேட்ஸ்மேன் உங்களுக்கு எதிராக பந்துவீசி உள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தான் பவுலிங் செய்து சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் பந்து வீசியதிலேயே இந்திய அணியின் துவக்க வீரர் ஷேவாக்கு எதிராக மிகவும் சிரமப்பட்டு உள்ளேன். அதிலும் குறிப்பாக குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் சென்னை மைதானத்தில் அவர் முச்சதம் அடித்தார்.

- Advertisement -

அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் விதம் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மேலும் அவரிடம் கொஞ்சம் அசந்தாலும் எதிரணிகளை ஊதித் தள்ளி விடுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் : சேவாக்கின் ஆட்டம் எப்போதுமே அதிரடியாக ஒன்று, அவர் பந்து வீச்சாளர்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தும் வீரர். எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு எளிதான பந்தையும் அவர் இதுவரை விட்டு வைத்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் அணுகுமுறையை மாற்றியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்பது மட்டுமின்றி 2 முச்சதங்களை விளாசியுள்ளார். அதில் ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக மற்றொன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் வந்தது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க வீரராக அதிரடி காட்டியவர்கள் பட்டியலில் சேவாக்கிற்கு இடம் உண்டு என்பது நிச்சயம்.

Advertisement