தரமான இரு வீரர்களை நச்சுனு வாங்கிய பெங்களூரு. இந்தமுறை கப் ஜெயிச்சிடுவாங்களோ ?

Abrcb
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று முன்தினம் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

RCB

- Advertisement -

அதன்படி இந்த வருட ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் தேர்வில் பெங்களூர் ராயல்ஸ் அணியும் கலந்து கொண்டு சிறப்பான வீரர்களை தேர்வு செய்தது. அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் ஆகியோரை தேர்வு செய்தது.

பெங்களூரு அணியின் இந்த தேர்வு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த பல ஆண்டுகளாக வருடாவருடம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் பெங்களூர் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக பெங்களூர் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் முன்னணி வீரர்கள் இல்லாமல் கடந்த ஆண்டு விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை மட்டுமே நம்பி பெங்களூரு அணி இருந்தது.

finch1

ஆனால் இம்முறை பின்ச், ஸ்டெயின் மற்றும் மோரிஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களுடன் திறமையான வீரர்களும் இம்முறை அணியில் உள்ளதால் இம்முறை நிச்சயம் பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த அணி நிர்வாகம் உறுதியாக நம்புகிறது. மேலும் பந்துவீச்சு பலப்படுத்தும் விதமாகவும் சில வீரர்கள் அணியில் இருப்பதனால் நிச்சயம் இம்முறை பெங்களூர் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பெங்களூரு ரசிகர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement