சச்சினோட கம்பேர் பண்ணாதீங்க.. நம்ப முடியாத சூர்யவன்சி இதை செய்ய முடியுமா தெரியல? ஸ்டீவ் வாக் பாராட்டு

Steve Waugh 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியை போலவே ராஜஸ்தானும் சுமாராக விளையாடி 9வது இடத்தைப் பிடித்து வெளியேறியது. இருப்பினும் அந்த அணிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி வருங்காலங்களில் அசத்தப்போகும் நம்பிக்கை நட்சத்திரமாக கிடைத்துள்ளது ஆறுதலாக அமைந்தது. கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் அண்டர்-19 இந்திய அணிக்காக சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அதிரடியான சதத்தை அடித்து சாதனை படைத்தார்.

அதனால் அவரை ராஜஸ்தான் அணி 2 கோடி என்ற பெரிய தொகைக்கு நம்பி வாங்கி வாய்ப்பும் கொடுத்தது. அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்த சூரியவன்சி குஜராத்துக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் சதத்தை அடித்த இளம் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.

- Advertisement -

அதிரடியான சூர்யவன்சி:

அதற்கடுத்த போட்டிகளிலும் ஓரளவு அதிரடியாக விளையாடிய அவர் வருங்காலங்களில் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இந்தியாவுக்காக விளையாடிய இளம் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை சூரியவன்சி உடைப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூரியவன்சியால் இதே போல விளையாட முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

மேலும் சச்சினுடன் யாரையும் ஒப்பிடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த சதத்தை நான் பார்த்தேன். இவர் எப்படி பந்தை நன்றாக அடிக்கிறார், எப்படி எளிதாக சிக்ஸர்களை ரிலாக்ஸாக அடிக்கிறார் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை. வெறும் 14 வயதில் அழுத்தத்தைப் பற்றி தெரியாமல் அவர் சுதந்திரத்துடன் விளையாடியதை பார்த்தது விருந்தாக இருந்தது”

- Advertisement -

சச்சினுடன் ஒப்பிடாதீங்க:

“கட்டுப்பாட்டுடன் விளையாடுவதே அவருக்கான சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வருடத்தை போலவே சுதந்திரத்துடன் ஆர்வத்துடன் தொடர்ந்து விளையாட முடியுமா? என்பதும் சவாலாக இருக்கும். நேரம் காரணமாக நான் நிறைய ஐபிஎல் போட்டிகளைப் பார்ப்பதில்லை. ஆனால் இது போன்ற விஷயங்கள் உங்களைப் பார்க்கத் தூண்டும். அவர் சிறப்பாக விளையாடினார்”

இதையும் படிங்க: நல்லவேளை இந்த டெக்னிக் இல்லாத ஸ்ரேயாஸை இங்கிலாந்தில் எடுக்கல.. அகர்கர், கம்பீரை பாராட்டிய பனேசர்

“அதற்காக சச்சினுடன் நீங்கள் யாரையும் ஒப்பிட கூடாது. ஏனெனில் 16 வயதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தடுமாறக்கூடிய உலகின் மிகவும் தனித்துவமான பெர்த் பிட்ச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் சதத்தை அடித்தார். சச்சின் போன்றவர் வருவது அரிது. ஆனால் 14 வயதில் ஒருவர் ஐபிஎல் தொடரில் சதத்தை அடிப்பது நினைக்க முடியாத ஒன்றாகும். இப்போதும் இந்த பையன் எப்படி அதை செய்தார் என்று நான் என்னிடமே கேட்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement