நல்லவேளை இந்த டெக்னிக் இல்லாத ஸ்ரேயாஸை இங்கிலாந்தில் எடுக்கல.. அகர்கர், கம்பீரை பாராட்டிய பனேசர்

Monty Panesar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடருக்காக புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படாதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2021இல் அறிமுகமான அவர் தனது முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக சதத்தை அடித்து அசத்தினார்.

இருப்பினும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக பலவீனத்தைக் கொண்டிருந்த அவர் அதே வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் மோசமாக விளையாடினார். குறிப்பாக கொல்கத்தா ஐபிஎல் அணியில் இருந்த போது அவருடைய பலவீனத்தை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் அறிந்து வைத்திருந்தார். அதை வைத்து பால்கனியில் அமர்ந்து கொண்டு அவர் இங்கிலாந்து பவுலர்களிடம் ஒற்றை செய்கையை காட்டி ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை எடுத்ததை மறக்க முடியாது.

- Advertisement -

நல்லவேளை கழற்றி விட்டீங்க:

அதனால் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் அதற்காக சளைக்காமல் ஷார்ட் பிட்ச் பந்துகளில் நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். அதை வைத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல உதவிய அவருக்கு இங்கிலாந்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்தில் அசத்த மாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவரை அஜித் அகர்கர், கெளதம் கம்பீர் ஆகியோர் கழற்றி விட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டு இந்திய அணி நிர்வாகம் சிறந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் பாராட்டியுள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி நிர்வாகத்தினர் ட்ரிக்கை தவற விடவில்லை என்று நான் நம்புகிறேன். அவர் மிகவும் நல்ல வீரர். ஆனால் வேகம் மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகளில் அவர் தடுமாறக்கூடியவர் என்று நம்புகிறேன்”

- Advertisement -

பனேசர் பாராட்டு:

“அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கான டெக்னிக் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவருடைய ரெகார்ட் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அது ஃபிளாட்டான, சுழலுக்கு சாதகமான பிட்ச்களை கொண்ட சூழ்நிலைகளில் மட்டுமே நன்றாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் சூப்பர் ஸ்டார் என்று நினைக்கிறேன். ஆனால் வேகம் மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகள் என்று வரும் போது அதை சமாளிக்க அவரிடம் டெக்னிக் இல்லை”

இதையும் படிங்க: 2019லிருந்தே தெரியும்.. இதனால தான் ஸ்ரேயாஸை 26.75 கோடிக்கு வாங்குனோம்.. பஞ்சாப் சாதிக்கும்.. பாண்டிங் பேட்டி

“மிருதுவான கைகளைக் கொண்டிராத அவர் பந்தை தாமதமாகவும் விளையாடுவதில்லை. கைகளை வேகமாக நகர்த்தக்கூடிய அவருடைய கால்கள் அதிகம் நகர்வதில்லை. கண் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த டெக்னிக் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகக்கூடிய சூழ்நிலைகளுக்கு பொருந்தும். ஆனால் இங்கிலாந்து போன்ற ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகளை பொருந்துமா என்பது சந்தேகமாகும்” எனக் கூறினார்.

Advertisement