- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவருக்கு எதிரா விளையாட இருப்பது எப்போவுமே எனக்கு மகிழ்ச்சி தான் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

இந்த ஆண்டு இறுதியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் தற்போதே ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தும் தொடராக மாறியுள்ளது.

அவருக்கு எதிரா விளையாட ரொம்ப பிடிக்கும் :

ஏனெனில் கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியை நிகழ்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

அதே வேளையில் கடந்த இரண்டு முறை ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியும் வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரானது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடப் போகும் ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடர் குறித்தும் தனது சக போட்டியாளரான விராத் கோலி குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி செயல் மற்றும் எண்ணங்களில் ஆஸ்திரேலிய வீரர் போலவே விளையாடுகிறார் என்று எண்ணுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் வெளிப்படுத்தும் ஈடுபாடு, ஆக்ரோஷம் மற்றும் மிகச் சிறப்பான ஆட்டம் என அனைத்துமே ஆஸ்திரேலிய வீரர்களை போல இருக்கிறது.

- Advertisement -

அதேபோன்று ஒரு எதிரணி வீரர் தன்னை சீண்டி விட்டால் அவர் மீது ஆதிக்கம் செலுத்தி விராட் கோலி ஆடும் விதமெல்லாம் ஆஸ்திரேலியா போல தான் இருக்கும். உண்மையில் விராட் கோலியை தாண்டி நான் வெல்ல வேண்டும் என்று நினைத்தது கிடையாது. என்னுடைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம்.

இதையும் படிங்க : 4 வருஷம் ஆச்சு.. தப்பு என்மேலயும் இருக்கு.. இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடல.. நடராஜன் பேட்டி

நானும் விராட் கோலி எப்போதுமே நன்றாக பழகிக் கொள்கிறோம். அடிக்கடி மெசேஜ் செய்து கொள்கிறோம். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர், அற்புதமான மனிதர். அவருக்கு எதிராக நான் எப்போது விளையாடினாலும் அது மிகச் சிறப்பாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -