4 வருஷம் ஆச்சு.. தப்பு என்மேலயும் இருக்கு.. இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடல.. நடராஜன் பேட்டி

Natarajan
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளூர், டிஎன்பிஎல், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். அதனால் 2020 – 21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் இந்திய அணிக்காக நெட் பவுலராக தேர்வானார். அந்த சுற்றுப்பயணத்தில் முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் ஓரளவு நன்றாகவே பந்து வீசிய நடராஜன் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக காபா டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் சரித்திர வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் அதன் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து 4 வருடங்களாகியும் அவருக்கு இந்திய அணியில் மறு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

4 வருடங்கள் ஆச்சு:

அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடு மற்றும் அரசியல் காரணமாக பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த சூழ்நிலையில் இந்தியாவில் தற்போது 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த சாதாரண உள்ளூர் தொடரில் கூட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் 2021 காபா டெஸ்ட் போட்டிக்கு பின் தம்முடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டதாக நடராஜன் கூறியுள்ளார். அதனால் கடந்த 4 வருடங்களாக மேற்கொண்டு உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தாம் விளையாடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதனாலேயே தமக்கு துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் நடராஜன் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

முழங்கால் காயம்:

“சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் நான் விளையாடி கிட்டத்தட்ட 4 வருடங்களாகி விட்டது. அதற்காக நான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. இருப்பினும் அதில் விளையாடுவதால் எனது பணிச்சுமை அதிகமாகிறதாக உணர்கிறேன். ஆனால் தற்போது நான் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டை தவிர்க்கிறேன். ஏனெனில் அதிகமாக விளையாடும் போது எனது முழங்காலில் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது”

இதையும் படிங்க: சச்சின் சாதனையை முறியடிக்க வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீமிற்கு கிடைத்துள்ள வாய்ப்பு – சாதிப்பாரா?

“அதனாலேயே அதில் விளையாடுவதை நான் நிறுத்தியுள்ளேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டை நான் அதிகமாக விரும்புகிறேன். தற்போதைய திட்டங்கள் இப்படியே சென்று நல்ல பயிற்சிகளை எடுத்தால் இன்னும் சில வருடங்களில் நான் மீண்டும் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டுக்கு திரும்புவேன். ஆனால் தற்போதைய நிலைமை நான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.

Advertisement