IPL 2023 : ஒரு காலத்துல எப்டி இருந்த மனுஷன் – ஐபிஎல் தொடரில் வித்யாசமாக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித், ரசிகர்கள் ஆதங்கம்

Smith
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடராக போற்றப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து தரத்திலும் பணத்திலும் இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ள ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகள் 74 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பொதுவாக தரமான திறமையான வீரர்களுக்கு கோடிகளை அள்ளி கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக விளையாடும் வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கும் ஐபிஎல் சில வீரர்களிடம் கரிசனம் காட்டாமல் நடந்து கொள்வதும் வழக்கமாகும்.

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் ஏலத்தில் விலை போகாத கதைகள் ஏராளமாகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் எந்த அணியிலும் வாங்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. ஆரம்பகாலம் முதலே டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பாராட்டும் அளவுக்கு அசத்தி வருகிறார்.

- Advertisement -

புதிய அவதாரம்:
இருப்பினும் அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் சற்று தடுமாற்றத்துடன் பொறுமையாக விளையாடும் வழக்கத்தை வைத்திருக்கும் அவர் 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 152 ரன்களை மட்டுமே எடுத்தார். அதனால் டெல்லி நிர்வாகம் விடுவித்த அவரை 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. ஆனாலும் கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2023 பிக்பேஷ் தொடரில் அதிரடியாக விளையாடி அதிக சிக்ஸர்கள் அடித்து 2 சதங்களை விளாசிய அவர் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

அப்படிப்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் தாமும் களமிறங்க போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டீவ் ஸ்மித் ட்விட்டரில் திடீரென்று அறிவித்தது பின்வருமாறு. “நமஸ்தே இந்தியா. நான் உங்களுக்காக சில சுவாரசியமான செய்தியை வைத்திருக்கிறேன். நான் விரைவில் ஒரு சிறப்பான ஆர்வமான இந்திய அணியில் இணைய உள்ளேன்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதனால் ஆர்வமடைந்த ரசிகர்கள் ஒருவேளை காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவாரோ என்ற எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர். ஆனால் கொல்கத்தா அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்ட நிலையில் 2023 ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வல்லுனராக வர்ணையாளராக செயல்பட இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் இந்த போட்டியை நன்றாக படிக்கிறேன் என்று நினைக்கிறேன். எனவே ஐபிஎல் தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு போட்டியின் நுணுக்கமான தருணங்களை என்னால் எளிதாக விளக்க முடியும் என்று நம்புகிறேன். மொத்தத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த ஸ்டீவ் ஸ்மித் தற்போது வர்ணனையாளராக பார்க்க வேண்டிய நிலைமை வந்து விட்டதே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:தோனியும் இல்ல, ரோஹித்தும் இல்ல, எனக்கு பிடிச்ச ஐ.பி.எல் கேப்டன்னா அது இவர்தான் – ஆர்.பி.சிங் வெளிப்படை

ஏனெனில் 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2458 ரன்களை குவித்து நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் ராஜஸ்தான் அணியை சில சீசன்களில் கேப்டனாக வழி நடத்தி 2017 சீசனில் புனே அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர். குறிப்பாக இந்தியாவின் ஜாம்பவான் கேப்டனான எம்எஸ் தோனியையே ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் செய்த ஒரே வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையையும் ஸ்டீவ் ஸ்மித் கொண்டுள்ளார். இருப்பினும் காலத்தின் கட்டாயத்தால் மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா போல இவரையும் வர்ணையாளராக இந்த சீசனில் ரசிகர்கள் பார்க்க தயாராகியுள்ளனர்.

Advertisement