தோனியும் இல்ல, ரோஹித்தும் இல்ல, எனக்கு பிடிச்ச ஐ.பி.எல் கேப்டன்னா அது இவர்தான் – ஆர்.பி.சிங் வெளிப்படை

RP-Singh
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் இரண்டு தினங்களில் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

CSK vs GT shami uthappa

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் ஐபிஎல் தொடர் குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி சிங் ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் அவருக்கு மிகவும் பிடித்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் எனக்கு பிடித்த மிகச்சிறந்த கேப்டன் என்றால் ஆடம் கில்கிரிஸ்ட் தான். அவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வழிநடத்திய விதம் மிகவும் தனித்துவமானது.

Gilchrist

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துவக்கத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை மூன்று ஆண்டுகள் வழிநடத்திய கில்கிரிஸ்ட் முதல் சீசனில் தோல்வியை சந்தித்தாலும், அதற்கு அடுத்த இரண்டாவது வருடம் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்தார். அவரது கேப்டன்சியின் கீழ் விளையாடியதிலிருந்து சொல்கிறேன் அவரே சிறந்த கேப்டன் என்று ஆர்.பி சிங் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : 9வது இடத்தில் ரபாடாவை தெறிக்க விட்ட செஃபார்ட் தனித்துவ சாதனை, தெ.ஆ’வை சாய்த்த வெ.இ த்ரில் வெற்றி

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பைகளை வென்ற அணியாக மும்பை அணி ஐந்து முறையும், இரண்டாவது இடத்தில் சென்னை அணி நான்கு முறையும் கோப்பையை வென்றிருக்கும் வேளையில் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரது பெயரை குறிப்பிடாமல் ஆடம் கில்கிரிஸ்ட் தான் சிறந்த கேப்டன் என ஆர்.பி சிங் கூறியுள்ளது தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement