வரலாற்றில் அரிதாக முதல் முறையாக கேப்டன் புஜாரா தலைமையில் விளையாடும் ஸ்மித் – இருவரும் ஜோடியாக கொடுத்த பேட்டி இதோ

Steve Smith Pujara
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடந்த உள்ளன. குறிப்பாக கடந்த முறை நியூசிலாந்திடம் ஃபைனலில் விராட் கோலி தலைமையில் கோப்பையை தவற விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வெல்ல போராட உள்ளது.

பொதுவாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களைக் கொண்ட இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த இந்திய அணியினர் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய இங்கிலாந்தில் தடுமாறுவது வழக்கமாகும். எனவே அங்கு அசத்துவதற்கு முன்கூட்டியே பயணித்து தயாராவது அவசியமாகும் நிலையில் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். ஆனால் தம்மை யாரும் வாங்காததால் கடந்த வருடம் கழற்றி விடப்பட்ட போது இங்கிலாந்து பயணித்து கௌண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாக செயல்பட்டு கம்பேக் கொடுத்த புஜாரா தற்போது மீண்டும் அந்த தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

புஜாரா தலைமையில் ஸ்மித்:
அதிலும் குறிப்பாக கடந்த வருடம் சதங்களை இரட்டை சதங்களையும் விளாசி மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் அந்த அணி நிர்வாகம் புஜாராவை தங்களது கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த சீசனிலும் சதமடித்து அவரும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விலை போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அதே சசக்ஸ் அணியில் 3 போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவானாக சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் கூட கேப்டனாக செயல்பட்ட அவர் அரிதாக முதல் முறையாக இந்தியாவின் புஜாரா தலைமையில் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது. இந்நிலையில் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை உட்பட வரலாற்றில் எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ள புஜாராவுடன் விளையாடுவதற்கு காத்திருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சசக்ஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “புஜாராவுடன் இணைந்து விளையாட நான் ஆவலுடன் உள்ளேன். ஏனெனில் அவருக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். அதே போல் எங்களுக்கு எதிராக அவர் ஏராளமான ரன்களை அடித்துள்ளார். எனவே இந்த வாய்ப்பில் நாங்கள் ஒன்றாக விளையாடி ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொள்வோம் என்று நம்புகிறேன்” என கூறினார். அதே போல ஸ்மித்துடன் இணைந்து விளையாடி அவரை கேப்டன்ஷிப் செய்யப் போவது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு.

“ஸ்மித் எங்களது அணியில் இருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களது அணி வீரர்கள் இணைந்து விளையாடி தேவையான விஷயங்களை கற்றுக் கொள்ள அவருடன் காத்திருக்கின்றனர். நிறைய அனுபவத்தை கொண்டுள்ள அவர் எப்படி தயாராகிறார் என்பதை பார்க்க காத்திருக்கிறோம். நாங்கள் அனைவருமே அவருடைய அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இதற்கு முந்தைய காலங்களில் நாங்கள் அதிகமாக எதிரணிகளில் விளையாடியுள்ளோம்”

- Advertisement -

“ஒரே அணியில் விளையாடியதில்லை. அதனால் இம்முறை அவருடன் இணைந்து விளையாடி அவரை சற்று அதிகமாக புரிந்து கொள்ள முயற்சிக்க உள்ளேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நாங்கள் மீண்டும் எதிரெதிர் அணிகளில் விளையாடயுள்ளதால் தற்போதைக்கு கலவையான உணர்வுகளே இருக்கிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் களத்தில் நாங்கள் போட்டி போட்டாலும் களத்திற்கு வெளியே நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:GT vs DC : ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட திவாடியா – பாண்டியாவை தாண்டி கடைசி ஓவரில் இஷாந்த் சர்மா மேஜிக் நிகழ்த்தியது எப்படி

மொத்தத்தில் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக திகழும் புஜாரா, ஸ்மித் ஆகியோர் ஒன்றாக விளையாடுவதை பார்க்க இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement