GT vs DC : ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட திவாடியா – பாண்டியாவை தாண்டி கடைசி ஓவரில் இஷாந்த் சர்மா மேஜிக் நிகழ்த்தியது எப்படி

GT vs DC Ishant Sharma
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 44வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் குஜராத்தை கடைசி இடத்தில் தவிக்கும் டெல்லி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணிக்கு முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் கோல்டன் டக் அவுட்டாகி சென்ற நிலையில் கேப்டன் டேவிட் வார்னரும் பொறுப்பின்றி 2 (2) ரன்கள் அவசரப்பட்டு ரன் அவுட்டானார்.

போதாக்குறைக்கு அடுத்து வந்த ரிலீ ரோசவ் 8 (6) மனிஷ் பாண்டே 1 (4) பிரியம் கார்க் 10 (14) என முக்கிய பேட்ஸ்மேன்கள் புதிய ஸ்விங் செய்து மிரட்டலாக வீசிய முகமது ஷமியின் வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 23/5 என திணறிய டெல்லி 100 ரன்களை தாண்டுமா என அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்த போது நங்கூரமாக நின்று 6வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய அக்சர் படேல் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (30) ரன்கள் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

இஷாந்த் மேஜிக்:
ஆனால் அவருடன் சற்று அதிரடியாக விளையாடிய இளம் வீரர் அமன் கான் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 51 (43) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் மற்றொரு இளம் வீரர் ரிபல் படேல் 2 பவுண்டரி 1 சிக்சருடன் முக்கியமான 23 (13) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றி அவுட்டானதால் தப்பிய டெல்லி 20 ஓவர்களில் போராடி 130/8 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளும் மோகித் சர்மா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 131 என்று சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு கலீல் அஹமத் வீசிய முதல் ஓவரில் ரித்திமான் சஹா தடுமாறி டக் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில் 6 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்து வந்த விஜய் சங்கர் 6 (9) ரன்களில் இசான் சர்மாவின் அனுபவத்தில் போல்ட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் குல்திப் யாதவ் சுழலில் டக் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் 32/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற குஜராத்தை 3வது இடத்தில் களமிறங்கி காப்பாற்ற போராடிய ஹர்திக் பாண்டியாவுடன் அடுத்ததாக களமிறங்கி கை கோர்த்த அபினவ் மனோகர் விக்கெட்டை விடாமல் பேட்டிங் செய்தார். அதில் ஹர்திக் பாண்டியா நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அரை சதம் கடந்த நிலையில் அவருடன் 18 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 5வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாகவே விளையாடிய மனோகர் 26 (33) ரன்களில் அவுட்டானார்.

அதனால் கடைசி 2 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டபோது அன்றிச் நோர்ட்ஜெ வீசிய 19வது ஓவரில் அதிரடி காட்டிய ராகுல் திவாடியா கடைசி 3 பந்துகளில் ஹாட்ரி சிக்ஸர்களை பறக்க விட்டு திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதன் காரணமாக இசாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த பாண்டியா 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் 3வது பந்தில் ரன் எடுக்காத திவாடியா 4வது பந்தில் 20 (7) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அனுபவத்தை காட்டிய இசாந்த் சர்மாவுக்கு எதிராக வந்த ரசித் கான் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 5வது பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க: IPL 2023 : இதுக்கு எண்டே இல்லையா? இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நவீன் உல் ஹக் மோதல் – விராட் கோலி உண்மையான பதிலடி

அந்தளவுக்கு கடைசி ஓவரில் தனது அனுபவத்தை காட்டி வெற்றியை 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியின் பக்கம் கொண்டு வந்த இஷாந்த் சர்மா இன்னும் சோடை போகவில்லை என்பதை நிரூபித்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் பாண்டியா 59* (53) ரன்கள் எடுத்தும் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் சேசிங் செய்வதற்கு பெயர் போன குஜராத் 20 ஓவரில் 125/6 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இந்தப் போராட்ட வெற்றியால் டெல்லி 4வது வெற்றியை பதிவு செய்தது.

Advertisement