டெஸ்ட் கிரிக்கெட்டில் லாரா, டிராவிட் சாதனையை கடந்து வரலாறு படைத்த ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

Smith
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

ENG vs AUS

- Advertisement -

அதன்படி நேற்று துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 339 குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் நேற்றைய போட்டியில் 32 ரன்கள் அடித்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

Smith

அதிலும் குறிப்பாக அவர் படைத்த அந்த சாதனையை யாதெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 174 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை குவித்து அதிவேகமாக 9000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

- Advertisement -

இந்த வரிசையில் 172 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை பூர்த்தி செய்து சங்கக்காரா முதலிடத்திலும், 176 இன்னிங்ஸ்களில் டிராவிட் மூன்றாவது இடத்திலும், 177 இன்னிங்ஸ்களுடன் லாரா மற்றும் பாண்டிங் ஆகியோர் நாலாவது இடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா கஷ்டம் தான், அந்த 3 டீம்ல எதோ ஒன்னு தான் 2023 உ.கோ ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஸ்ரீகாந்த் நிதர்சன பேட்டி

அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவத்திலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் 15,000 ரன்களையும் கடந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு நவீன மாடர்ன் டே கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு அடுத்து அதிக சராசரியுடன் 15000 ரன்களை குவித்த வீரராகவும் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement