இந்தியா கஷ்டம் தான், அந்த 3 டீம்ல எதோ ஒன்னு தான் 2023 உ.கோ ஜெயிக்க வாய்ப்பிருக்கு – ஸ்ரீகாந்த் நிதர்சன பேட்டி

Srikkanth
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை சொந்த மண்ணில் முழுவதுமாக நடத்துகிறது. அதனால் வெளிநாட்டில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவாக செயல்பட்டு வரும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் நாக் போட்டிகளில் சொதப்பும் இந்தியா 5 ஐபிஎல் கோப்பைகள் வென்ற அனுபவமிக்க ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கொஞ்சமும் முன்னேறாமல் தோல்வியை சந்தித்தது. அத்துடன் லண்டனில் நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் கொஞ்சம் போராடாமல் தோற்ற இந்தியா அஸ்வின் போன்ற தரமான வீரர்களை தேர்ந்தெடுக்காதது சுமாரான வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது போன்ற அடிப்படைகளிலேயே சொதப்புவதால் இந்த கோப்பையையும் வெல்லப் போவதில்லை என்று ரசிகர்கள் நம்பிக்கையற்று காணப்படுகின்றனர்.

வாய்ப்புள்ள அணிகள்:
அது போக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் அழுத்தமான மிகப்பெரிய போட்டிகளில் இந்தியாவை கைவிடுவதை 2017 சாம்பியன்ஸ் டிராபி முதல் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களையும் வெளிநாட்டு அணிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதன் காரணமாக சொந்த மண்ணாக இருந்தாலும் இந்த தொடரில் தரமாக செயல்பட்டால் மட்டுமே கோப்பையை தொட்டு பார்க்க முடியும் என்ற நிலைமையில் தான் இந்தியா களமிறங்குகிறது.

IND vs AUS Siraj Shami Marsh Head

இந்நிலையில் சொந்த மண்ணில் இந்தியா உலகக் கோப்பை வெல்வதற்கு தகுதியுடைய அணி என்றாலும் அதற்கு சவாலாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இருக்கும் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவரான அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் இந்தியா ஒன்றாக இருக்கும். இருப்பினும் உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் நல்ல வலுவாக இருக்கின்றன”

- Advertisement -

“குறிப்பாக இந்திய கால சூழ்நிலைகளில் ஆஸ்திரேலியர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். எனவே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் ஏதேனும் ஒரு அணி கோப்பையை வெல்லும் என்று நான் சொல்வேன். அதிலும் இங்கிலாந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தவிதமான கிரிக்கெட்டையும் அதிரடியாக விளையாட துவங்கியுள்ளது. 2015 உலக கோப்பையில் தோற்ற பின் அவர்களுடைய அணுகுமுறை மொத்தமாக மாறியுள்ளது”

Kris Srikkanth

“2019 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் நாம் அதை பார்த்தோம். சொல்லப்போனால் தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர்கள் தோற்றாலும் கூட அதிரடியாக விளையாடினர். இருப்பினும் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிக வாய்ப்புள்ளது என்று நான் சொல்வேன். ஏனெனில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடி இங்குள்ள கால சூழ்நிலைகளில் நன்கு புரிந்துள்ளனர்”

இதையும் படிங்க:2023 உலக கோப்பையில் சொந்த மண் சாதகம்லாம் கிடையாது – 8400 கி.மீ ஆப்புடன் இந்தியாவுக்கு காத்திருக்கும் 3 சவால்கள் இதோ

“அதே சமயம் நிறைய இங்கிலாந்து வீரர்களும் இந்திய கால சூழ்நிலைகளில் விளையாடியுள்ளதை நாம் மறக்க கூடாது. அதனாலயே இந்த 3 அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று நான் சொல்கிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement