- Advertisement -
உலக கிரிக்கெட்

332 ரன்ஸ்.. முதல் நாளிலேயே இலங்கையை நொறுக்கிய கவாஜா, ஆஸி.. டிராவிட்டை முந்தி ஸ்மித் 10000 ரன்ஸ் சாதனை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த உத்வேகத்துடன் கால்லே நகரில் இன்று துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாகவும் உஸ்மான் கவாஜா நிதானமாகவும் விளையாடினார்கள்.

அதில் இந்தியாவையே அடித்து நொறுக்கிய ஹெட் கொஞ்சமும் மாறாமல் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 (40) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த லபுஸ்சேன் 20 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கவாஜா அரை சதத்தை கடந்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீம் ஸ்மித் தம்முடைய ஸ்டைலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

நொறுக்கும் ஆஸி:

அவருடன் சேர்ந்து மறுபுறம் இலங்கை பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கவாஜா சதத்தை அடித்து அசத்தினார். இந்தப் பக்கம் தம்முடைய பங்கிற்கு சேர்த்து இலங்கை பவுலர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் விளையாடிய ஸ்மித் அரை சதத்தை கடந்தார். நேரம் செல்ல செல்ல மெதுவாக விளையாடிய இந்த ஜோடியில் ஸ்மித்தும் சதத்தை அடித்து அசத்தினார்.

அவர்களுடைய ஆட்டத்தால் முதல் நாளிலேயே இலங்கையை சொந்த மண்ணில் நொறுக்கிய ஆஸ்திரேலியா 330-2 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. களத்தில் கவாஜா 147*, ஸ்டீவ் ஸ்மித் 104* ரன்களுடன் நங்கூரமாக விளையாடி வருகிறார்கள். முன்னதாக இந்தப் போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலேயே ஸ்டீல் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 10,000 ரன்கள் கடந்தார்.

- Advertisement -

ஸ்மித் சாதனை:

கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த இந்திய தொடரை 9999 ரன்களுடன் முடித்த அவர் இந்தப் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது அதிவேகமான 10000 ரன்கள் அடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிரான எனது இந்த சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் இதுதான் – ஆதில் ரஷீத் பேட்டி

இதற்கு முன் டிராவிட் 206 இன்னிங்ஸில் 10000 ரன்கள் அடித்த நிலையில் ஸ்மித் 205 இன்னிங்ஸில் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 10000 ரன்கள் அடித்த 15வது கிரிக்கெட் வீரர் மற்றும் 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் சுனில் கவாஸ்கர், மகிளா ஜெயவர்த்தனே, பிரைன் லாரா, யூனியஸ் கான் (தலா 34) ஆகியோரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (35) அடித்த 7வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -