இந்திய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றி பதிவு செய்தது. ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த ஐந்து போட்டிகள் போன்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு இதுதான் காரணம் :
அதனை தொடர்ந்து நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியா இங்கிலாந்து அணி இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தின் மூலம் வீழ்த்தியதால் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து தற்போது இந்த டி20 தொடரிலும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி நேற்றைய இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 171 ரன்கள் அடித்தால் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்தின் சார்பாக 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஆதில் ரஷீத் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.
அந்த வகையில் தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிடீ அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தோம். குறிப்பாக திலக் வர்மாவின் விக்கெட்டை நான் வீழ்த்தியது மிகச் சிறப்பாக இருந்தது. நாம் எவ்வளவு போட்டியில் விளையாடுகிறோமோ அவ்வளவு அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை வைத்து நான் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தேன்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு காரணம் இவங்கதான்.. வெற்றிக்கு பின்னர் பேசிய – ஜாஸ் பட்லர்
பேட்டிங்கில் நாங்கள் பெரிய ரன்களை குறிக்க முடியாமல் போனாலும் பந்துவீச்சில் மைதானத்தின் தன்மையை அறிந்து கண்ட்ரோல் செய்து கொண்டோம் எங்களது பந்துவீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பு தான் இந்த வெற்றி காரணம். நானும் வலைப்பயிற்சியில் ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கிறேன். அதன் காரணமாகவே எனது பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது என ஆதில் ரஷீத் கூறியது குறிப்பிடத்தக்கது.



