உலகக்கோப்பை மட்டும் தள்ளிவைக்கப்பட்டால் நேரா இந்தியாவுக்கு வந்து இந்த தொடரில் விளையாடுவேன் – ஸ்மித் அதிரடி

Smith
- Advertisement -

16 அணிகள் பங்குபெறும் மிகப்பிரமாண்டமான 20 ஓவர் டி20 உலகக் கோப்பை தொடரை அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக இந்த உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Smith

- Advertisement -

இந்நிலையில் வரும் (10 ஜூன்) பத்தாம் தேதி டெலி கான்பிரன்ஸ் மூலம் இந்த தொடர் குறித்து முக்கிய முடிவுகளை பிரதிநிதிகள் எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சத்தமின்றி காய் நகர்த்தி வருகிறது.

ஏற்கனவே மார்ச் மாதம் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு இப்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாள் எப்போது மீண்டும் ஐபிஎல் துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தற்போது ஆஸ்திரேலியாவில் சற்று நிலைமை திரும்பி வீரர்கள் பயிற்சியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

Smith 1

பூட்டிய மைதானத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்மித், ஸ்டார்க், வார்னர் போன்ற நட்சத்திர வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது : உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு நான் முன்னுரிமை அளிப்பேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த டி20 உலகக்கோப்பை அவ்வளவு முக்கியமான ஒன்று.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை தொடரில் நான் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன். ஒருவேளை அந்தத் தொடர் தள்ளி வைக்கப்படும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன். உள்ளூர் தொடர்களிலேயே ஐபிஎல் போட்டியின் சிறப்பானதாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் உலக கோப்பை தொடர் நடைபெறுமா என்பது சந்தேகம்தான்.

Smith-1

மேலும் எந்த ஒரு முடிவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை எனவே நான் உலகக்கோப்பை போட்டி குறித்து இப்போது சிந்திக்கவில்லை. ஆனால் ஐபிஎல் நடக்கும் என்று தெரியும் பட்சத்தில் நான் நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாட காத்திருக்கிறேன் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement