பேட்ஸ்மேன்களை ஏமாற்றி பந்துவீசுவதில் இவர் வல்லவர். நான் பார்த்ததிலேயே கடினமான பவுலர் இவர்தான் – ஸ்மித் பேட்டி

Smith
- Advertisement -

கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் விராட் கோலிக்கு நிகரான வீரராக பார்க்கப்படுகிறார். கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளும் சிறப்பாக ஆட ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

Smith

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துவரும் அவரது பேட்டிங் ஸ்டைல் மரபு சார்ந்தது இல்லை என்றாலும் வித்தியாசமான டெக்னிக்கை கொண்டு பவுலர்களை திணறடிக்கும் வீரராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 26 சதங்களுடன் 7227 ரன்களை குவித்துள்ளார்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக குறிப்பிடப்படும் இவர் ஆஸ்திரேலிய மட்டுமின்றி இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து நாடுகளிலும் ரன்களை குவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஃபாஸ்ட், ஸ்பின், உள்நாடு, வெளிநாடு என அனைத்திலும் கலக்கும் இவர் தான் எதிர்கொண்ட திலேயே கடினமான பவுலரை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவின் ஸ்பின் பவுலிங்கை எதிர் கொள்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார். ஏனெனில் துணைக்கண்டத்தில் ஜடேஜாவின் பவுலிங்கில் ஆடுவது மிகக் கடினம். மிகத்துல்லியமான லெந்தில் வீசக்கூடியவர்.

Jadeja-1

அதுமட்டுமில்லாமல் நல்ல வேரியேஷனில் வீசுவார் ஒரு பந்து வழுக்கிக் கொண்டு செல்லும்போது ஒரு திடீரென திரும்பும் ஆனால் அவரது கை அசைவுகளை வைத்து அந்த பவுலிங்கை கணிப்பிட முடியாது. அதுவே அவருடைய பலம் என்று கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே உலகின் தலைசிறந்த பீல்டராக ஜடேஜாவை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement