IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு செல்லக்கூடிய 4 அணிகள் இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

Smith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16-வது சீசனானது இன்று மார்ச் 31-ம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த 15 சீசன்களை விட தற்போது இன்று துவங்கவுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது முன்பை காட்டிலும் பல மடங்கு சுவாரசியத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 10 அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IPL-2023

- Advertisement -

அதேபோன்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை நடைபெறும் இந்த தொடரின் இறுதியில் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் எது என்பது குறித்த தனது கருத்தினை அளித்துள்ளார்.

அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : முதல் அணியாக சி.எஸ்.கே அணியைத்தான் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்துள்ளார். ஏனெனில் சி.எஸ்.கே அணியில் தோனி, ஜடேஜா, ஸ்டோக்ஸ், மொயின் அலி, தீபத் சாகர் போன்ற தரமான வீரர்கள் இருப்பதினால் சென்னை அணி எளிதாக பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

CSK Matheesa Pathirana

அதேபோன்று இரண்டாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் தேர்வு செய்துள்ளார். ஏனெனில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹார்டிக் பாண்டியா, ரஷீத் கான், மேத்யூ வேட், டேவிட் மில்லர், திவாதியா போன்ற வீரர்கள் இருப்பதினால் இம்முறையும் அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

- Advertisement -

மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளாக லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணியை தேர்வு செய்துள்ள ஸ்டீவ் ஸ்மித் சன்ரைசர்ஸ் அணிக்கும் லக்னோ அணிக்கும் பிளேஆப் சுற்றுக்கு செல்ல பிரமாதமான வாய்ப்பு உள்ளதாகவும் சன்ரைசர்ஸ் அணியை பொருத்தவரை பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாகவும், லக்னோவை பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களை பலமாக கொண்ட அணியாகவும் இருப்பதினால் நிச்சயம் இவ்விரு அணிகளும் தகுதி பெறும் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : NZ vs SL : இலங்கைக்கு இப்படி ஒரு நிலையா? 1979க்குப்பின் நேர்ந்த மெகா உ.கோ அவமானம் – தொடரை வென்ற நியூஸிலாந்து

கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆண்டு மினி ஏலத்தில் ஏலம் போகவில்லை என்பதனால் ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement