- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா வெற்றிக்கு தகுதியானவங்க.. அவங்க மாதிரி இந்த பழி சொல்ல விரும்பல.. ஆஸி கேப்டன் ஸ்மித் பேட்டி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது. குறிப்பாக துபாயில் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற செமி ஃபைனலில் வலுவான உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியாவிடம் தோல்வியை சந்திக்க அதைக் காரணமாக சொல்லப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். உண்மையில் சிறப்பாக விளையாடி தங்களை வீழ்த்திய இந்தியா வெற்றிக்கு தகுதியான அணி என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஸ்மித் பாராட்டு:

அதே சமயம் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணம் பற்றி அவர் விவரித்தது பின்வருமாறு. “இந்தியாவின் சாதகம் பற்றி நான் பேசப் போவதில்லை. உண்மையில் இந்தியா இங்கே கொஞ்சம் நல்ல கிரிக்கெட்டை விளையாடியது. இங்குள்ள சூழ்நிலைகள் அவர்களுடைய ஸ்டைலுக்கு பொருத்தமாக இருக்கிறது. இங்குள்ள சூழ்நிலையில் அசத்துவதற்கு தகுந்த ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர்”

“அதைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்திய அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது சரியான முடிவு. நாங்கள் 300 ரன்கள் குவிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தோம். ஆனால் தக்க சமயங்களில் நாங்கள் ஒவ்வொரு விக்கெட்டாக இழந்தோம். ஒருவேளை அந்த சமயங்களில் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் 290 – 300 ரன்கள் அடித்து இன்னும் அழுத்தத்தை அதிகரித்திருக்க முடியும்”

- Advertisement -

விடை பெற்ற ஸ்மித்:

“இருப்பினும் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. அதே போல நாங்கள் சில கேட்சுகள் விட்டோம். 260 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும் சூழ்நிலையில் எதிரணிக்கு அதிக அழுத்தத்தை போட வேண்டுமெனில் நீங்கள் அது போன்ற வாய்ப்பை இறுக்கமாக பிடிக்க வேண்டும். ஆனால் விளையாட்டில் இப்படி நடக்கும். யாரும் வேண்டுமென்று கேட்ச் விட மாட்டார்கள். இதுவும் விளையாட்டின் அங்கம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அதான் டர்னிங் பாய்ண்ட்.. இன்னும் ஒன்னு இருக்கு.. விருது வழங்கிய ரவி சாஸ்திரிக்கு.. நினைவூட்டிய விராட் கோலி

அவர் கூறுவது போல 51 ரன்னில் இருந்த போது விராட் கோலி கொடுத்த கேட்சை மேக்ஸ்வெல் தவற விட்டார். அதற்கு முன்பாக ரோஹித் சர்மா கொடுத்த கேட்சையும் ஆஸ்திரேலியா தவற விட்டது அந்த அணியின் தோல்வியை உறுதி செய்தது. இந்தப் போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -