ஆஷஸ் 2023 : ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித் – 2 ஆவது டெஸ்டிலும் அசத்தல்

Steve-Smith
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Steve Smith 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டியானது ஜூன் 28-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் ஆஸ்திரேலியா ஆனது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடியது.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 138 ரன்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட உள்ளது.

Smith

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்துள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 32-வது சதத்தை பதிவு செய்த ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரராக ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆக்டிவாக விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலிக்கு (75) அடுத்து அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பட்டியலில் ஜோ ரூட் (46), டேவிட் வார்னர் (45) ஆகியோரை தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : முதலில் அதை செஞ்சா தானே சர்பராஸ் கான் பற்றி தெரிஞ்சுக்க முடியும்? தேர்வுக்குழுவை விமர்சித்த சௌரவ் கங்குலி

இந்த பட்டியலில் ரோகித் சர்மா 43 சதங்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் வேளையில் அவரை தாண்டி தற்போது ஒட்டுமொத்தமாக 43 சதங்கள் அடித்து ஆக்டிவாக இருக்கும் வீரர்களில் அதிக சதம் விளாசியுள்ள வீரர்களின் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் (44) சதங்களுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement