முதலில் அதை செஞ்சா தானே சர்பராஸ் கான் பற்றி தெரிஞ்சுக்க முடியும்? தேர்வுக்குழுவை விமர்சித்த சௌரவ் கங்குலி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைய விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் காரணமாக இருந்த நிலையில் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விடப்பட்டதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். அதை விட அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் அசத்திய யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

Sarfaraz-Khan

- Advertisement -

ஏனெனில் இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்வதே காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த 3 வருடங்களாகவே தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் கிட்டத்தட்ட 80 என்ற சராசரியில் 3505 ரன்களை எடுத்துள்ள சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் வெறித்தனமாக போராடி வருகிறார் என்றே சொல்லலாம். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் அவர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

கங்குலி அதிருப்தி:
மறுபுறம் அவரை விட ரஞ்சி கோப்பையில் 42 என்ற குறைவான சராசரியில் ரன்களை குவித்துள்ள ருதுராஜ் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்தியதால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த நிலையில் சர்வதேச தரத்திற்கு அல்லாமல் சுமாரான ஃபிட்னஸை கொண்டிருப்பதுடன் தரமற்ற பவுலிங் கொண்ட ரஞ்சிக் கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவதாலேயே அவர் புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் வாய்ப்பு கொடுத்தால் தானே சர்ப்ராஸ் கான் தடுமாறுகிறாரா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என தேர்வுக்குழுவை விமர்சிக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்திய அணியில் விளையாடுவதற்கான தகுதி அவரிடம் இருப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் மட்டுமின்றி ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே போன்ற அனைத்து விதமான உள்ளூர் தொடர்களிலும் அசத்தி வரும் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டது மிகவும் சரி என்று பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை, துலீப் கோப்பை என பல்வேறு உள்ளூர் தொடர்களில் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஏராளமான ரன்களை அடித்துள்ளார் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே இன்று அவர் இந்திய அணியில் இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அதே சமயம் சர்ப்ராஸ் கானுக்காக நான் வருந்துகிறேன். குறிப்பாக கடந்த 3 வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள ரன்களுக்கு பரிசாக அவருக்கு ஏதேனும் ஒரு சமயத்தில் வாய்ப்பு நிச்சயம் கிடைக்க வேண்டும். அதே போல அபிமன்யு ஈஸ்வரன் கடந்த 4 – 5 வருடங்களாக தொடர்ந்து பெரிய ரன்களை எடுத்து வருகிறார்”

Ganguly-3

“ஆனாலும் அந்த இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும் வருங்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் முதலில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தால் தானே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சர்பராஸ் கான் தடுமாறுகிறாரா? என்பது உங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க:2023 உலக கோப்பையில் இந்தியாவ தோற்கடிப்பது எங்களுக்கு ஒரு மேட்டர் இல்ல, அது தான் முக்கியம் – சடாப் கான் பேட்டி

“ஒருவேளை நீங்கள் சொல்வது போல் அந்த பிரச்சனையை அவர் கொண்டிருந்தால் இந்தியா முழுவதிலும் நடைபெற்ற உள்ளூர் தொடர்களில் அவர் இவ்வளவு ரன்களை அடித்திருக்க முடியாது. எனவே என்னை பொறுத்த வரை அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எந்த பிரச்சனையும் கொண்டிருக்கவில்லை என்று கருதுகிறேன். அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். அந்த வகையில் நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுத்து வருவதால் விரைவில் சர்பராஸ் கான் வாய்ப்பு பெறுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement