ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.. நம்பிக்கை அளிக்க வரும் ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

Steve Smith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் கடைசிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு :

அந்த வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா அணியும் விளையாடி வருகிறது. இந்த லீக் சுற்று போட்டிகளில் முதல் ஆட்டத்தில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிராக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விடயமாக தற்போது முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட முடியாததால் அவருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

பயிற்சியின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவரால் முதல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவக்குழு அறிவித்துள்ளதால் இரண்டாவது போட்டியிலும் அவரால் பங்கேற்க முடியாத சுழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் இலங்கை பயணித்து அணியுடன் இணைந்து விளையாட இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நமீபியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக தீவிர தயாராகும் பாண்டியா – புதிய பயிற்சி

மிட்சல் மார்ஷ் ஒருவேளை இந்த தொடரில் முழுவதுமாக விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த பிக் பாஷ் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த தொடரிலும் அசத்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement