நமீபியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக தீவிர தயாராகும் பாண்டியா – புதிய பயிற்சி

Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தங்களது முதலாவதாக ஆட்டத்தில் அமெரிக்கா அணியை வீழ்த்தி அசத்தியது.

கடும் பயிற்சியில் இருந்து வரும் ஹார்டிக் பாண்டியா :

அதனை தொடர்ந்து பிப்ரவரி 12-ஆம் தேதி டெல்லி நகரில் நடைபெறயிருக்கும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி நிச்சயம் இந்த நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வந்தது.

- Advertisement -

அதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற இருக்கும் இந்த போட்டி பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளுக்கும் முன்னதாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவும் முழு வீச்சில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்படி நடைபெற்று வரும் பயிற்சி அமர்வுகளில் பந்து வீச்சில் சில மணி நேரங்களை கவனம் செலுத்திய அவர் பேட்டிங்கின் போது கூடுதலாக இரண்டரை மணி நேரம் வரை பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த உலககோப்பை தொடரில் அந்த ஒரு போட்டிக்காக தான் காத்துகிட்டு இருக்கோம் – திலக் வர்மா பேட்டி

ஏற்கனவே நடைபெற்ற அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அடித்திருந்த அவர் எதிர்வரும் போட்டிகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் பவர் ஹிட்டிங்கில் கவனம் செலுத்தி கூடுதல் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement