- Advertisement -
உலக கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடை கடந்து அசத்தலான சாதனையை நிகழ்த்திய – ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சிட்னி நகரில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 384 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்களையும், ஹாரி புரூக் 84 ரன்களையும் குவித்தனர்.

ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் :

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 567 ரன்களை குவித்து அசத்தியது. இந்த முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 138 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 183 ரன்கள் பின்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணியானது தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக நாளை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 119 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான ராகுல் டிராவிட்டின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிக சதங்களை அடித்த வீரராக 36 சதங்களுடன் ஆறாவது இடத்தில் இருந்த ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளி 37 சதங்களுடன் தற்போது ஸ்டீவ் ஸ்மித் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒன்னு இந்தியாவில் விளையாடுங்க.. இல்லனா அதை இழந்துட்டு போங்க.. வங்கதேசத்துக்கு ஐசிசி பதில்?

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்திலும், ஜாக் காலிஸ் 45 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், ஜோ ரூட் 41 சதங்களுடன் நான்காவது இடத்திலும், குமார் சங்கக்காரா 38 சதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -