ஒன்னு இந்தியாவில் விளையாடுங்க.. இல்லனா அதை இழந்துட்டு போங்க.. வங்கதேசத்துக்கு ஐசிசி பதில்?

- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்கி நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியாவுக்கு வந்து தங்களது போட்டிகளை விளையாட மாட்டோம் என்று வங்கதேச வாரியம் அறிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தியதாக செய்திகள் வெளியானது.

அதற்கு இந்தியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் ஒரு பகுதியாக வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்ற எதிர்ப்பும் எழுந்தது. எனவே எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஹ்மானை அணியிலிருந்து நீக்குமாறு கொல்கத்தாவுக்கு பிசிசிஐ அறிவுரை கொடுத்தது.

- Advertisement -

ஒன்னு இந்தியாவில் விளையாடுங்க:

அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட கொல்கத்தா நிர்வாகமும் 9.20 கோடிக்கு வாங்கப்பட்ட ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்தது. அதற்கு பதிலடியாக உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று அறிவித்த வங்கதேசம் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்பவும் தடை விதித்தது. அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஐசிசிக்கு வங்கதேசம் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் கோரிக்கை செவ்வாய்க்கிழமையான நேற்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையிலான நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. அதனுடைய முடிவில் வங்கதேசத்தின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக ஐசிசி கருதுகிறது.

- Advertisement -

புள்ளிகளை இழங்க:

எனவே ஒன்று திட்டமிட்டபடி இந்தியாவில் விளையாடுங்கள். அல்லது விளையாட மறுத்தால் புள்ளிகளை இழக்க எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று வங்கதேசத்திடம் ஐசிசி அறிவுறுத்தியுள்ளதாக ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் விளையாட மறுத்தால் வங்கதேச போட்டிகளின் புள்ளிகள் விதிமுறைப்படி எதிரணிக்கு வழங்கப்படும்.

இதையும் படிங்க: 54 ரன்ஸ்.. திரிபுராவை வீழ்த்திய தமிழ்நாடு.. விஜய் ஹசாரே கோப்பையில் 2வது ஆறுதல் வெற்றி

அதை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று வங்கதேசத்திடம் ஐசிசி தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் அதை வங்கதேசம் ஏற்பதற்கு குறைந்த வாய்ப்புகளே இருக்கின்றது. அதனால் நேற்று நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் வங்கதேசத்திற்கு ஐசிசி தங்களின் இறுதி முடிவை தெரிவிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது. அதனால் இந்த விவகாரம் இன்னும் சில பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement