54 ரன்ஸ்.. திரிபுராவை வீழ்த்திய தமிழ்நாடு.. விஜய் ஹசாரே கோப்பையில் 2வது ஆறுதல் வெற்றி

Tamil Nadu
- Advertisement -

விஜய் ஹசாரே கோப்பை 2025/26 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு மற்றும் திரிபுரா அணிகள் மோதிய போட்டி ஜூன் 6ஆம் தேதி நடைபெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற திரிபுரா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 50 ஓவரில் போராடி 259/6 ரன்கள் குவித்தது.

தமிழக அணிக்கு துவக்க வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 9, கேப்டன் நாராயன் ஜெகதீசன் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய பாபா இந்திரஜித் 48 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து அசத்திய ஆண்ட்ரே சித்தார்த் 70 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தமிழ்நாடு அசத்தல்:

மிடில் ஆர்டரில் முகமது அலி 46*, கார்த்திக் மணிகண்டன் 35*, பூபதி குமார் 27 ரன்களை குவித்து கை கொடுத்தனர். திரிபுரா அணிக்கு அதிகபட்சமாக முராசிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய திரிபுரா அணிக்கு உதியன் போஸ் 2, ஸ்ரீதம்பால் 1, தமிழக வீரர் விஜய் சங்கர் 10 ரன்களில் குர்ஜப்நீத் சிங் வேகத்தில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதே போல மறுபுறம் நிதானமாக விளையாடிய தேஜஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்னில் ரன் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ரஹத் டே 30, ஸ்வப்னில் சிங் 23, கேப்டன் முராசிங் 43 ரன்கள் எடுத்த போதிலும் அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார்கள். இறுதியில் சேண்டு சர்கார் 22 ரன்கள் எடுத்தும் திரிபுரா 42.4 ஓவரில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

தமிழ்நாடு ஆறுதல் வெற்றி:

அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு குர்ஜப்நீத் சிங் 6, வருண் சக்கரவர்த்தி 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் சாய்த்தார்கள். இந்த வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குர்ஜப்நீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையும் சேர்த்து குரூப் ஏ பிரிவில் 6 போட்டிகளில் தமிழ்நாடு வெறும் 2வது வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்திய மகளிரணி அடுத்த 10 வருஷத்துக்கு ஆஸிக்கே பயத்தை கொடுப்பாங்க.. ஆனா நாங்க தான் பெஸ்ட்.. ஆஸ்லே

அதனால் இத்தொடரில் தமிழ்நாடு அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அணி தங்களது கடைசி போட்டியில் கேரளாவை எதிர்கொள்கிறது. ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள அப்போட்டியில் இந்தப் போட்டியை போலவே தமிழ்நாடு ஆறுதல் வெற்றி பெற போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement