ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் ஜூன் 11ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பவுலிங் செய்த தென்னாபிரிக்கா 212 ரன்களுக்கு சுருட்டியது.
உஸ்மான் கவாஜா 0, லபுஸ்ஷேன் 17, கேமரூன் க்ரீன் 4, டிராவிஸ் ஹெட் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 67/4 என தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நாயகன் அரை சதத்தை அடித்து 66 ரன்கள் குவித்து கை கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய வெப்ஸ்டர் 72 ரன்கள் அடித்து அசத்தினார்.
தென் ஆப்பிரிக்கா திணறல்:
இறுதியில் அலெக்ஸ் கேரி 23 ரன்கள் எடுத்த போதிலும் ஆஸ்திரேலியா 250 ரன்கள் கூட தாண்டவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா மார்க்கோ யான்சன் விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்த விளையாடும் தென்னாப்பிரிக்கா முதல் நாளில் முடிவில் 43/4 என திணறி வருகிறது.
ஐடன் மார்க்ரம் 0, ரியன் ரிக்கல்டன் 16, வியன் முல்தர் 6, ஸ்டப்ஸ் 2 ரன்களில் அவுட்டானார்கள். களத்தில் கேப்டன் பவுமா 3*, டேவிட் பேடிங்கம் 8* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இப்போட்டி கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. அங்கே இப்போட்டியில் அடித்த 66 ரன்களையும் சேர்த்து ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் மொத்தம் 6 போட்டிகளில் 591* ரன்களை அடித்துள்ளார்.
மெக்காவில் உலக சாதனை:
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் வாரன் பார்ட்ஸ்லே 575, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ் 571 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனைகள். மேலும் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 2வது அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் ஸ்மித் (7 முறை) உடைத்துள்ளார்.
இதையும் படிங்க: சுதர்சன் அறிமுகம்.. இங்கிலாந்து போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த.. உத்தப்பா பேட்டி
இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 6 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. முதலிடத்தில் விராட் கோலி (10 முறை) உள்ளார். அத்துடன் ஐசிசி ஃபைனல்களில் அதிக முறை 50 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையையும் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. குமார் சங்கக்காரா: 4
2. விராட் கோலி/ஆடம் கில்கிறிஸ்ட்/ஸ்டீவ் ஸ்மித்: தலா 3



