சுதர்சன் அறிமுகம்.. இங்கிலாந்து போட்டிக்கான தனது இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்த.. உத்தப்பா பேட்டி

Robin uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் அந்தப் போட்டிக்கான தம்முடைய இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தேர்ந்தெடுத்துள்ளார்.

அந்த அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனை அறிமுகமாக தேர்ந்தெடுத்துள்ள அவர் 3வது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் உத்தப்பா பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை மேலிருந்தே வலுவாக துவங்க விரும்புவதால் கேஎல் ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும்”

- Advertisement -

இந்திய அணி:

“கடந்த ஆஸ்திரேலிய தொடரில் நன்றாக விளையாடிய ராகுல் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். 3வது இடத்தில் சாய் சுதர்சன் போன்றவர் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் டெக்னிக்கல் அளவில் சரியாக பேட்டிங் செய்யும் அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறன் கொண்டிருப்பதாக உணர்கிறேன்”

“4வது இடத்தில் கண்டிப்பாக சுப்மன் கில் விளையாடுவார். 5வது இடத்தில் கொஞ்சம் அனுபவம் தேவை என்பதால் கருணை நாயர் இருக்க வேண்டும். 6வது இடத்தில் ரிஷப் பண்ட் இடத்தில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். 7வது இடத்தில் நித்திஸ் ரெட்டி விளையாடுவதற்கு இனிப்பான இடமாக இருக்கும். ஏனெனில் இளம் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுன்டரான அவர் 4வது ஆப்சனாக இருப்பார்”

- Advertisement -

உத்தப்பா லெவன்:

“பேட்டிங் வரிசையை ஆழப்படுத்தி ரன்கள் அடிப்பதற்காக 8வது இடத்தில் நான் ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுப்பேன். ஏற்கனவே அவர் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரன்கள் எடுத்துள்ளார். இம்முறை சிராஜ் மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா ஒரு மாற்றமாக வருவார். நித்திஷ் ரெட்டி மற்ற பவுலர்களுக்கு ஆதரவு கொடுப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 3000 ரன்ஸ் அடிச்சும்.. பஞ்சாப் தோற்க நான் தான் காரணம்.. ஃபைனல்ல மிஸ்ஸாகிடுச்சு.. நேஹல் ஏமாற்ற பேட்டி

இங்கிலாந்து தொடருக்காக ராபின் உத்தப்பா தேர்ந்தெடுத்த இந்திய லெவன்: கேஎல் ராகுல், யசஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

Advertisement