Ashes 2023 : அட்டகாசமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே படைக்காத தனித்துவ உலக சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்குள்ளானது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜூலை 6ஆம் தேதி ஹெண்டிங்க்லே நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இத்தொடரில் முதல் முறையாக தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டைப் போல அதிரடியாக விளையாடி 17 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 118 (118) ரன்களை விளாச இங்கிலாந்து சார்பில் தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் பட்டைய கிளப்பும் வகையில் அசத்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.

- Advertisement -

ஸ்மித் உலக சாதனை:
அதன் பின் களமிறங்கி இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 237 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது. குறிப்பாக ஜோ ரூட் 19, ஜானி பேர்ஸ்டோ 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் நங்கூரமாக நின்று 80 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக இப்போட்டியை தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியாக களமிறங்கி சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஃபீல்டிங் செய்யும் போது எந்த பக்கம் அடித்தாலும் நானே வருவேன் என்பது போல் செயல்பட்டார் என்றே சொல்லலாம். குறிப்பாக ஹரி ப்ரூக், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரது கேட்ச்களை ஸ்லிப் பகுதிகளில் நின்று கச்சிதமாக பிடித்த அவர் மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் ப்ராட் என லோயர் பேட்ஸ்மேன்கள் கொடுத்த கேட்ச்சை பவுண்டரி எல்லையின் அருகே நின்று சரியாக பிடித்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த இன்னிங்ஸில் மட்டும் 5 கேட்ச்களை பிடித்த அவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு கேப் டவுன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் இதே போல 5 கேட்ச்கள் பிடித்திருந்தார். அதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு இன்னிங்ஸ்களில் 5 கேட்ச்களை பிடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்சன் 1936ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் யுஜுர்விந்தர சிங் 1977ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவும் முகமது அசாருதீன் 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் கிறிஸ் ஸ்ரீகாந்த் 1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் 1997இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் தலா 5 கேட்ச்களை பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:சி.எஸ்.கே ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தோனியின் பிறந்தநாள் அன்று ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட வாழ்த்து – என்னனு பாருங்க

அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவின் கிராம் ஸ்மித் 2012இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சம்மி 2013இல் இந்தியாவுக்கு எதிராகவும் ட்வயன் ப்ராவோ 2014இல் வங்கதேசத்துக்கு எதிராகவும் இந்தியாவின் அஜிங்க்ய ரகானே 2015இல் இலங்கைக்கு எதிராகவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெமிமா பிளாக்வுட் 2015இல் இலங்கைக்கு எதிராகவும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 2020இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் இலங்கையின் லகிரு திரிமன்னே 2021இல் இங்கிலாந்துக்கு எதிராகவும் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் தலா 5 கேட்ச்களை பிடித்தனர். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே முதல் முறையாக 2 இன்னிங்ஸ்களில் 5 கேட்ச்களை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement